இயக்குனர் பா.ரஞ்சித் பிரபலமான இயக்குநராவார். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் ராஜராஜ சோழனை பற்றி அவதூறாக பேசியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், தற்போது இவர், மல்டி ஸ்டார் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஆர்யா, ராணா மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும், மேலும் பல இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.