மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மே 10-ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் என்று அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு இறுதியில் பிரதமர் மோடி இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சென்றிருந்தார். அப்போது, லட்சத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன், தனது அனுபவங்களையும் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில், மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அவரது அனுபவங்களை பகிர்ந்திருந்தார். இதற்கு மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை […]