காசாவில் நடந்து வரும் போரால் மாலத்தீவுகளில் மக்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் பாஸ்போர்ட்டை கொண்டவர்களுக்கு நாட்டு நுழைவைத் தடை செய்வதாக மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது. மாலத்தீவின் அதிபர் அலுவலகம், கடந்த ஞாயிற்றுக்கிழமை, வெளியிட்டுள்ள அறிவிப்பில் இஸ்ரேல் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு நுழைவைத் தடுக்க சட்ட மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்ததாகவும், இந்த செயல்முறையை கண்காணிக்க ஒரு துணைக்குழுவை அமைப்பதாகவும் அறிவித்தது. அதிபர் முகமது முவிசு பாலஸ்தீன மக்களின் தேவைகளை மதிப்பீடு செய்ய சிறப்பு தூதரை நியமித்து, நிதி […]
Maldives : இந்தியாவின் ஏற்றுமதி கொள்கை குறித்து மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி லட்சதீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது சுற்றுலா செல்ல விரும்புவோர் இந்திய தீவான லட்சத்தீவுக்கு வாருங்கள் என பதிவிட்டு புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு மாலத்தீவு அமைச்சர்கள், இந்தியா எவ்வளவு முயற்சி செய்தாலும் மாலத்தீவு அளவுக்கு சுற்றுலா தரத்தை அளிக்க முடியாது என பதிவிடும் வகையில் கருத்து கூறியிருந்தனர். இந்தியாவுக்கு எதிரான மாலத்தீவு அமைச்சர்களின் […]
கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றிருந்தார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைபடங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் தொடர்பாக மாலத்தீவு அதிபா் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 3 அமைச்சா்கள் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவை பற்றியும் சா்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டனா். இதைத் தொடா்ந்து, இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு […]
சென்னை விமான நிலைய நிர்வாகம் இன்று இரண்டு முக்கிய வழித்தடங்கள் வழியாக செல்லும் விமான சேவை அறிவிப்பை வெளியிட்டுளளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து அயோத்தி மற்றும் லட்சத்தீவில் உள்ள அகாட்டி ஆகிய இடங்களுக்கு விமான சேவை செயல்படும் சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்த விமான சேவையானது அடுத்த வாரம் முதல் துவங்க உள்ளது. மாலத்தீவு விவகாரம்.. பெரிய திட்டத்துடன் லட்சத்தீவில் களமிறங்கிய டாடா.! அயோத்தியில் வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக […]
இம்மாத தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு கடல்சார் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் பங்கேற்று அதனை போட்டோ, விடீயோக்களாக தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார். லட்சத்தீவு பற்றிய பிரதமர் மோடியின் பதிவு பற்றி மாலத்தீவு எம்பிக்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தனர். வியாபாரத்தை விட தேசப்பற்று முக்கியம்.! மாலத்தீவை ஓரம்கட்டிய EaseMyTrip.! பிரதமர் மோடி குறித்தும், இந்திய சுற்றுலாத்துறை குறித்தும் மாலத்தீவு எம்பிகளின் கருத்துக்களுக்கு, இந்திய அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என […]
இந்தியாவை சேர்ந்த EaseMyTrip எனும் பயண ஏற்பாட்டு நிறுவனம் தற்போது மாலத்தீவுக்கான முன்பதிவுகளை தங்கள் தளத்தில் இருந்து நீக்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இம்மாத தொடக்கத்தில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவுக்கு சென்றார். அந்த பயணத்தின் போது பிரதமர் ஆழ்கடலில் நீச்சல் அடித்தும், கடற்கரையில் நடைபயணம் சென்றும் லட்சத்தீவின் அழகை ரசித்தார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில் ”சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம்” எனவும் பதிவிட்டார். […]
பிரதமர் மோடி கடந்த வாரம் லட்சத்தீவு சென்றபோது இங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடி பதிவிற்கு விமர்சித்து கருத்துக்களை தெரிவித்தனர். இதனால் மாலத்தீவு அமைச்சர் 3 பேர் தற்காலிக பதவி நீக்கம்செய்யப்பட்டனர். இருப்பினும் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதால் “மாலத்தீவு புறக்கணியுங்கள்” என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலானது. மேலும், மாலத்தீவுவிற்கு இந்தியர்களால் முன்பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் விமான டிக்கெட் ரத்து […]
சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுகளுக்கு சென்று நேரம் செலவிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை இணையத்தில் பதிவிட்டு, லட்சத்தீவு, வெறும் தீவுகளின் கூட்டமல்ல. அது, காலம் காலமாக நீடித்துவரும் பாரம்பர்ய மரபு, மக்களுக்கான சான்று. கற்கவும், வளர்வதற்குமான வாய்ப்பாக என் பயணம் அமைந்தது என மகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார். இதனை குறிப்பிட்டு, மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டனர். மாலத்தீவை போல லட்சத்தீவை […]
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2, 3-ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றார். அந்த பயணத்தின் போது பிரதமர் ஆழ்கடலில் நீச்சல் அடித்தும், கடற்கரையில் நடைபயணம் சென்றும் லட்சத்தீவின் அழகை ரசித்தார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில்” இயற்கை அழகுடன் லட்சத்தீவின் அமைதி மனம் மயங்க செய்கிறது. லட்சத்தீவு மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன். சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் […]
மாலத்தீவில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 இந்தியர்கள் உள்பட 10 பேர் உயிரிழப்பு என இந்திய தூதரகம் தகவல். மாலத்தீவு தலைநகர் மாலேவில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றின் தரைத்தளத்தில் ஏற்பட்ட தீ மளமளவென வீடுகளுக்கு பரவியதால் மொத்தம் 10 பேர் பலியாகியுள்ளனர். இதில், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்த […]
நடிகை ராஷ்மிகா மந்தனா மனதை ஒருநிலை படுத்துவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலத்தீவுக்கு சென்றார். இப்போது அங்குதான் இருக்கிறார், அங்கு இருக்கும் நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு ஜாலியாக புகைப்படங்கள் எடுத்து அதனை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார். நேற்று கூட கண்ணாடி அணிந்து கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து இன்று உடல் தெரியும் படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் […]
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை பல படங்களில் நடித்து பிசியாக இருக்கிறார். இதற்கிடையில், மனதை ஒருநிலை படுத்துவதற்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கு சென்று நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு ஜாலியாக புகைப்படங்கள் எடுத்து அதனை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார். மேலும் ராஷ்மிகா மாலத்தீவில் இருக்கும் வேலனா தீவு விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பிரபல Ozen Reserve Bolifushi கடற்கரை ஹோட்டலிலில் தான் தங்கி உள்ளார். இந்த ஹோட்டலிலில் தங்குவதற்கு […]
நடிகை சன்னி லியோன் ஆரம்ப காலகட்டத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களை போல சமீப காலமாக மீண்டும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். நேற்று முன்தினம் கூட அட்டகாசமான பிகினி உடையில் கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து இன்று கூலிங் கிளாஸுடன் பிகினி உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தின் மேல் பிகினி படத்தின் “எமோஜியையும்” பதிவிட்டுள்ளார். இதையும் படியுங்களேன்- வாய்ப்பு குறைந்தால்… ஆடையும் குறையுமா..? ரம்யா பாண்டியனை வச்சு […]
நடிகை அமலா பால் நடிப்பில் கடைசியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான கடவார் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார். சமீப நாட்களாக, இவரது முன்னாள் காதல் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலாவந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில், படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது, சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். ஒரு சிறிய […]
நடிகை சன்னிலியோன் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நேற்று முன்தினம் கூட அட்டகாசமான பிகினி உடையில் கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மாலத்தீவு கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் சில அட்டகாசமான புகைப்படங்களை ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை வெளியீட்டு அதற்கு மேல் “இந்த பிகினி எனக்கு பிடித்திருக்கிறது” எனவும் பதிவிட்டுள்ளார். சன்னிலியோன் வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
பெங்களூரில் இருந்து மாலே (மாலத்தீவு) நோக்கி 92 பயணிகளுடன் சென்ற கோ பர்ஸ்ட் விமானம், புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இன்ஜின் அதிக வெப்பம் குறித்து எச்சரிக்கை மணி அடித்ததை அடுத்து, கோவை விமான நிலையத்தில் இன்று மதியம் 12 மணிக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. கோயம்புத்தூர் வான்வெளியைக் கடக்கும்போது ஜி843 விமான பைலட் ‘மேடே’ அழைப்பு விடுத்ததால் கொச்சின் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (சியால்) ஏடிசி இந்த அருகிலுள்ள விமான நிலையமான கோயம்புத்தூருக்கு விமானத்தை இயக்கிய […]
இந்த வருடத்தில் மாலத்தீவை நோக்கி அதிமான அளவு சுற்றுலாப்பயணிகள் செல்வதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த வருடமான 2020-இல் கொரோனாவின் காரணமாக மாலத்தீவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் தற்போது மாலத்தீவில் சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து தற்போதுள்ள ஜூலை மாதம் வரை இங்கு 5,59,000 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். இது கடந்த வருடமான 2020 ஆம் ஆண்டு […]
தெற்காசிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நோ என்ட்ரி ! உலகளாவிய கொரோனா பாதிப்பில் இந்தியா மிகவும் மோசமான சூழலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது, இந்நிலையில் பல்வேறு நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் விமானங்கள், பயனிகள், உள்ளிட்டவைகளுக்கு அந்நாடுகளுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மாலத்தீவிற்குள்ளும் வர இந்திய உள்ளிட்ட பிற தெற்காசிய நாடுகளுக்கும் மாலத்தீவு அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது, எனவே, இந்த தடையானது ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இருந்து […]
புரேவி என்பது சதுப்பு நிலத்தில் வளரும் ஒரு தாவரத்தின் பெயர். இது கடும் புயலையும் தாங்கும் சக்தி கொண்டதால், இந்த புயலுக்கு புரேவி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு புரேவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று இலங்கையை கடந்த நிலையில், இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, தமிழக கடலோர பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
இலங்கை மற்றும் மாலத்தீவில் இந்த நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு நாடுகளில், ஒவ்வொரு காலகட்டங்களில் புது விதமான நோயகள் பரவி மக்களை அச்செருது வருகிறது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ், உலக முழுவதையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் தட்டம்மை, ரூபெல்லா நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மாலத்தீவில், 2009-ல் தட்டம்மை, 2015-ல் ரூபெல்லா நோய் பாதிப்பு கடைசியாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இலங்கையில், […]