கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வந்த இந்திய மாணவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வருவதற்காக ஏராளமானோர் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு சில தினங்களுக்கு முன் வந்தனர். இந்த நிலையில் மத்திய அரசு வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவில் தரையிறங்க கட்டுப்பாடு விதித்திருந்தது. மேலும் மலேசியா அரசு அனைத்து விமானங்களையும் தடை செய்திருந்தது. இதனால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் மாணவர்கள் கோலாலம்பூரில் விமான நிலையத்தில் சிக்கி தவித்தனர். இந்த நிலையில், […]
டிக்டாக்கில் லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக அரைகுறை ஆடையுடன் வீடியோ பதிவிட்ட பெண் ஒருவர். நான் திருந்தி வாழ வேண்டும் என்றால் கடனை அடைக்க ரூ.5 லட்சம் தாருங்கள் என்று நிபந்தனை. பெண்கள் ஆண்களை விரும்பிச்சென்ற காலம் போய் டிக்டாக்கில் பெண்கள், பெண்களுடன் வீட்டை விட்டு வெளியேறும் கலிகாலம் அரங்கேறி வருகின்றது. அந்த வகையில், மலேசியாவில் இருந்து நடிப்பு திறமை என அரைகுறை ஆடையுடன் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வரும் ரவுடி பேபி சூர்யா என்ற பெண் […]
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் 7 கோடிக்கும் மேல் அதிகமாக வாக்குகள் பெற்று டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார். இவரின் “அன்பு ஒன்று தான் அனாதை” என்ற வசனமும் “நீ தான்” என்ற பாடலும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முகின் தனது […]
நடிகை ஜோதிகா நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ராட்சசி. இப்படத்தை கௌதம்ராஜ் என்பவர் இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்து இருந்தார். இப்படம் பள்ளி மாணவர்கள் பற்றியும், கல்வியாளர்கள் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் நல்ல கருத்துக்களையம், கல்வித்துறையில்ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் என பல கருத்துக்களை முன்வைத்து முன் வைத்து எடுக்கப்பட்டு, ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது. தற்போது இந்த படத்தை மலேசிய கல்வி அமைச்சர், மாஸ்லே பின் மாலிக், தனது சமூக […]
மலேசியாவில் புதிய மன்னர் யார் என்பதை முடிவு செய்ய நாளை அந்நாட்டில் முக்கிய கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . மலேசிய மன்னர் சுல்தான் முகம்மது அண்மையில் தனது அரசு பதவியில் இருந்து விலகினார். 50 வயது கடந்த மன்னர் தனனை விட வயதில் மூத்த ருஷ்ய அழகியை திருமணம் செய்துகொண்டதால் சர்சை எழுந்தது. இதன் காரணமாக அவர் பதவி விலகியதாக கூறப்படுகிறது .இந்நிலையில் மலேசியாவின் அடுத்த புதிய மன்னரை தேர்ந்தெடுக்கு நடைமுறை நடந்து வருகின்றது. நிலைய தினம் இதற்கான முக்கிய கூட்டம் நடைபெறுகின்றது.இந்த கூட்டத்தில் மலேசிய புதிய […]
நாட்டின் புதிய பொருளாதாரத்தை மீட்க அரசு முயற்சி செய்கிறது என அந்நாட்டின் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார். மலேசிய நாட்டின் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவிக்கையில் , “நாட்டின் நிதி நிலைமை மீட்கப்பட்டு வருகின்றது. நம் நாடு பொருளாதார வளர்ச்சியில் மெதுவாக முன்னேறும் அதுவரை நாட்டின் மக்கள் பொறுமையுடன் இருப்பார்கள் என்று நான் நம்புகின்றோம் என்று நிதியமைச்சர் லிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில் நாட்டின் நம்முடைய நாட்டில் , பில்லியன் கணக்கில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது . நாட்டின் நிதி நிலைமையை மீட்டெடுப்பது […]
கடந்த ஆண்டு மலேசிய மன்னராக சுல்தான் முகமது பதவியேற்று , சிகிச்சை பெறுவதற்காக அரசப் பணிகளை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், மன்னர் ஐந்தாம் சுல்தான் முகமது தன்னுடைய மன்னர் பட்டத்தைத் துறந்ததாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பட்டத்தைத் துறந்ததற்கான முழு காரணம் என்னவென்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை. மலேசியா_வில் அந்நாட்டு சுதந்திரம் பெற்ற பிறகு, மன்னர் ஒருவர் பட்டம் துறப்பது இதுதான் முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் ஒரு கட்டடம் கட்டப்பட இருக்கிறது. அதற்காக பணம் சேகரிக்கும் முயற்சியில் நடிகர் சங்கம் குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.தற்போது நட்சத்திர கலைவிழா மலேசியாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் ரஜினி, கமல், சூர்யா, விஷால் என பல நடிகர்கள், நடிகைகள் பங்குபெற்றுள்ளனர்.இந்த நிலையில் நடிகர் சங்கத்திற்கு சரவணா ஸ்டோர்ஸ் சார்பாக ரூ. 2.5 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.நடிகர்களை தாண்டி இந்த நிகழ்ச்சியில் அவரும் பங்குபெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் இன்று – 2004 டிசம்பர் 26 உலகமே அதிர்ச்சியில் உறைந்து போன நாள். இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின. சுனாமி என அழைக்கப்படும் இந்த பேரலைகளின் தாக்குதலில் உலகம் முழுவதும் 2,26,000 பேர் உயிரிழந்தனர். 20,00,00 குடும்பங்கள் வீடுகளை இழந்தன. தாய்லாந்தில் 7,000 பேர், இந்தோனேசியாவில் 1,60,000 பேர், இலங்கையில் 35,000 […]