மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் கடந்த 100 நாட்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல், ஒரு சில தினங்களில் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தற்பொழுது மீண்டும் கமல்ஹாசன் சென்னை போரூரில் […]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேளச்சேரி வேட்பாளரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன்காரணமாக வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பின்னர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேளச்சேரி வேட்பாளரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைதொடர்ந்து அவருக்கு கொரோனா […]
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய கட்சியின் 18 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி காட்சிகளுக்கான தொகுதிகளையும், வேட்பாளர்களின் பட்டியல்களையும் அறிவித்து வருகிறது. அந்தவகையில் மக்கள் நீதி மய்யம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராஜ்பவன் – பர்வத வர்தினி இந்திரா […]
நாட்டின் GDP-இல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் புதிய கல்விக்கொள்கை தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. அது, பல்வேறு அறிவிக்களை கொண்டதாகவும், கல்வி முறையில் பெரிய மாறுதல்களை உள்ளடக்கியதாகவும் இருக்கின்றது. இதற்க்கு பல கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், புதிய கல்விக் கொள்கையில், […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக செயல்படுவதை குறிக்கும் வகையில் அனைவரும் ஒற்றுமையாக மின் விளக்கை அணைத்து அகல்விளக்கு (அ) டார்ச் லைட் ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து, நேற்று இரவு 9 மணிக்கு பெரும்பாலானோர் தங்கள் வீட்டில் அகல்விளக்கு ஏற்றினர். பிரதமரின் இந்த நடவடிக்கைகள் குறித்து மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஓர் அறிக்கை […]
இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசுகையில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவரது பெயர் நாதுராம் கோட்ஸே என என குறிப்பிட்டார். இதற்க்கு பாஜக, அதிமுக, இந்து முன்னணி அமைப்புகள் என பலரும் கண்டனங்களை பதிவு செய்ததோடு, வழக்குகளும் போடப்பட்டன. இதன் காரணமாக கமல்ஹாசன் உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு ஒன்றை அளித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். DINASUVADU
தற்போது சில தினங்களுக்கு முன்னர் இந்தியா ட்விட்டர் நடத்திய ‘வணக்கம் ட்விட்டர் ‘ என்ற நிகழ்ச்சியில் , நடிகர் கமல்ஹாசனிடம் கேள்விகளை கேட்க #AskKamalHaasan என்ற ஹேஸ்டேக்கை அறிமுகப்படுத்தினார். இதில் பலரும் அவரிடம் கேள்விகளை கேட்டனர். அதில் ஒரு கேள்வி நீங்கள் படித்த நூலில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய நூல் என கேட்டபோது.கமலஹாசன் தான் விரும்பாத நூலும் , தன்னை மிகவும் பாதித்த நூல் பூணூல் என்று பதிவிட்டார்.
நெல்லை:கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கூடாது. ஆணையம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் வள்ளியூர் வழக்கறிஞர் சேவியர் என்பவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மக்கள் பணிகளை அரசு செய்யாத காரணத்தினாலேயே, தாங்கள் அரசியலுக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியை கமல்ஹாசன் ஏற்றிவைத்தார். பின்னர், தொண்டர்களிடையே பேசிய அவர், நீர்நிலைகளை தூர்வாருதல், பேருந்து நிழற்குடை அமைத்தல் என நிறைய சின்ன சின்ன வேலைகள் செய்ய வேண்டியிருப்பதாக கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ஈரோடு மாவட்டம் சிக்கரசம்பாளையம் சென்ற கமல்ஹாசன், அங்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான அமைக்கப்பட்டுள்ள பள்ளியை பார்வையிட்டார். மாணவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்த கமல்ஹாசன், அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய கமல், மாற்றுத்திறனாளி குழந்தைகளை அன்பு காட்டி அரவணைக்க வேண்டும் என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹசானுக்கு திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை கமல் சந்திக்க உள்ளார். இதற்காக கோவைக்கு சென்று அங்கிருந்து காரில் ஈரோடு சென்ற கமலுக்கு வழியில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வாகனத்தில் நின்ற படி பேசிய கமல்ஹாசனைக் கண்டதும் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். பின்னர் பேசிய கமல்ஹாசன், தான் முன் நடந்து, மற்றவர் பின் தொடர்வது அரசியல் அல்ல; அனைவரும் […]
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் திருச்சியில் நேற்று விபத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். திருச்சி திருவெறும்பூர் தேசிய நெடுஞ்சாலையில் காவலர் ஹெல்மட் அணியாமல் வந்த தம்பதிகள் வாகனத்தை எட்டி உதைத்ததால் சாலையில் விழுந்த கர்ப்பிணி பெண் மீது பின்னால் வந்த வேன் மோதி பலியானார். கணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.திருச்சி தேசிய நெடுஞ்சாலை 3000 பேர் சாலை மறியல் செய்ததால் ஸ்தம்பித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு […]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனை விருந்தினர் மாளிகையில் சந்தித்து நலம் விசாரித்தார் . சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 11.55 மணிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் வழக்கமாக செய்துகொள்ளும் சோதனைகள்தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் அவருக்கு இன்று மதியம் மருத்துவமனையில் சிகிச்சைகள் எடுத்து முடிக்கப்பட்டவுடன் அவர் கேரள விருந்தினர் […]
காவிரி பிரச்சினை பற்றி கமல்ஹாசன் 65 வயதில் பேசுகிறார். ஆகவே அவர் ஒரு செல்லாக்காசு என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். ஒத்தக்கடையில் கட்சி ஆரம்பித்த கமல் அரசியலில் ஒத்தையில் நிற்கிறார் என்றும் ராஜேந்திரபாலாஜி கிண்டலடித்துள்ளார். காவிரி பிரச்சினை தீர ஜெயலலிதா பல முயற்சிகளை எடுத்தவர் என்றும், நேற்று கட்சி ஆரம்பித்த கமல்ஹாசனுக்கு எதுவும் தெரியாது என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். கமல்ஹாசன் ஒரு செல்லாக்காசு, அவர் பேசுவதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, நடிகர் கமல்ஹாசன் தனது […]