பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளதாக தனக்கு மின்னஞ்சல் மூலம் உறுப்பினர் அடையாள எண் வந்துள்ளதாக கூறியுள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிக்கு உறுப்பினர் சேர்ப்பதற்காக கிடைக்கும் மின்னஞ்சலுக்கெல்லாம் அழைப்பு விடுப்பதாகவும், தனது மின்னஞ்சல் முகவரிக்கும் தான் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளதாக மின்னஞ்சல் வந்துள்ளது வேடிக்கையாக உள்ளது என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்,குரங்கணி காட்டுத்தீ மீட்புப் பணிகளில் அரசின் செயல் பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரங்கணி காட்டுத்தீ சம்பவத்தைப் பாடமாக எடுத்துக் கொண்டு இனிவரும் காலங்களில் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த கமல்ஹாசன், மீட்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சிறப்பாக செயலாற்றி வருவதாக கூறினார். சிறுவாணி மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து […]
ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று கமல்ஹாசன் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் அவர்,பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார் நினைவு இல்லத்தை பார்வையிட்டார். அங்கு இருக்கும் பெரியார் பயன்படுத்தியாய் பொருட்கள், அவரது பழைய புகைப்படங்கள் ஆகியவற்றை பார்த்து ரசித்தார். பின்னர், நினைவு இல்லத்தில் இருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.