விஜய்யின் தமிழன் படத்தை இயக்கிய மஜித் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், அவரின் சிகிச்சைக்காக கே. ஜி. ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் பணம் செலுத்தி உதவியதாகவும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் […]