Tag: Maithripala Sirisena

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன-பிரதமர் மோடி சந்திப்பு

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவை பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக 2-வது முறையாக பதவி ஏற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு சென்றார்.பின்னர் அங்கிருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். இன்று இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுடன் பிரதமர் மோடி சந்தித்தார். இருதரப்பு உறவுகள், பயங்கரவாதத்தை எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BJP 2 Min Read
Default Image