மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் என்னும் மாவட்டத்தில் உள்ள தரூர் என்னும் இடத்தில் உள்ள ஒரு எஸ்பிஐ (SBI) வங்கி ஏடிஎம் மெஷினை திருடர்கள் கயிறு கட்டி இழுத்து திருடி உள்ளனர். இந்த அதிரவைக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. கடந்த சனிக்கிழமை இரவு பொழுது இந்த சம்பவமானது அரங்கேறி இருக்கிறது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட அந்த ஏடிஎம் மெஷினையும் ரூ.21 லட்சம் பணத்தையும் போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர். அந்த வீடியோவில், ‘ரெயின் கோட் […]
PEN India நிறுவனம் வெளியிட்ட ஐஐஎம் நடத்திய சர்வே முடிவுகளின் படி, சமூக வளர்ச்சி, தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, மனித வளர்ச்சி குறியீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. மக்கள் தொகை, வரி வருவாய், தொழிற்சாலைகள், சமூக வளர்ச்சி குறியீடு, நகரமயம், மனித வளர்ச்சி குறியீடு உள்ளிட்ட காரணிகளை முன்னிறுத்தி தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களை ஒப்பிட்டு ஐஐஎம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனை PEN India நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதள […]
மகாராஷ்டிரா: நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றியது. மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 9 தொகுதிகளை மட்டுமே பாஜக கைப்பற்றி இருந்தது. காங்கிரஸ் 13 தொகுதிகளையும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) 9 தொகுதிகளையும் , சரத் பவாரின் NCP 8 தொகுதிகளையும் வென்று இருந்தன. இதனை அடுத்து, இன்று PTIயில் வெளியான தகவலின்படி, மகாராஷ்டிரா துணை முதல்வராக உள்ள பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் , இனி […]
சென்னை: மகாராஷ்டிரா, தானே பகுதியில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே தானேவில் டோம்பிவாலி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் இன்று அடுத்தடுத்து பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையில் தீ பற்றியது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து பதிவிட்டுள்ள மகாராஷ்டிரா […]
உதயநிதிக்கு எதிரான சனாதன தர்மம் குறித்த வழக்கில் மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய “சனாதான ஒழிப்பு மாநாடு” எனும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசுகையில் டெங்கு, மலேரியா போன்று சனாதானமும் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். உதயநிதியின் இந்த பேச்சுக்கு இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் எழுந்தன. […]
அதிக நாய்கடிகளை வாங்கிய மாநிலத்தின் லிஸ்ட்டில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளது. தெருநாய்களின் தொல்லை இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் அதிகமாக இருக்கிறது. இரவில் தனியாக செல்வோருக்கு பல சமயம் தொந்தரவாகவும், பயமுறுத்தும் வண்ணமும் இருக்கிறது. இப்படி இந்த 2022ஆம் ஆண்டு அதிக நாய்கடிகளை வாங்கிய மாநிலத்தின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில், முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு 3,46,318 மருத்துவ வழக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டாம் இடத்தில் 3,30,264 மருத்துவ வழக்குகளுடன் தமிழகம் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் […]
அதிக எண்ணிக்கையில் பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. தற்போது வெளிநாடு சென்று வேலை பார்க்கும் ஆர்வமும், வெளியூர் சுற்றுலா செல்லும் ஆர்வமும் அதிகமாகி வருவதால் பாஸ்போர்ட் எடுக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதற்கு வசதியாக பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்க்கும் மையங்களும் அதிகரித்து உள்ளன. தற்போது பாஸ்போர்ட் பெற்றவர்கள் எண்ணிக்கையை மத்திய அரசு மாநில அளவிலான எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அதில், அதிக எண்ணிக்கையில், கேரளா 1.12 கோடி நபர்களை தாண்டி முதலிடத்தில் […]
சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் கொடுத்ததாக ராகுல் காந்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிராவில் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று காங்கிரஸ் கூட்டத்தில் அவர் பேசுகையில், அந்தமான் சிறையில் சாவர்க்கர் இருந்தபோது ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார் என ஓர் கடிதத்தை காண்பித்தார். சாவர்க்கர் […]
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ஓடும் ஆட்டோவில் இருந்து சிறுமி குதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஓடும் ஆட்டோவில் இருந்து சிறுமி குதித்துள்ளார், ஆட்டோ ஓட்டுநர் தன்னிடம் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதால், தற்காத்துக் கொள்ள ஓடும் வாகனத்திலிருந்து வெளியில் குதித்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் சையத் அக்பர் ஹமீது, கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், தலையில் காயம் அடைந்த பாதிக்கப்பட்ட சிறுமி, இங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. மஹாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்தார் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. மகாராஷ்டிரா மாநில முனிசிபல் கார்பரேஷன் ஊழியர்கள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பு அரசு ஊழியர்களுக்கு இந்த போனஸை அறிவித்துள்ளார். அவர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சுமார் 93,000 பேருக்கும், ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் […]
மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டபோது மொத்தமாக பல்வேறு இடங்களில் 20 உயிரிழப்புகள் ஏற்பட்டதாக மாநில அரசு சார்பில் தெரிவித்துளளது. விநாயகர் சதுர்த்தி கடந்த மாதம் (ஆகஸ்ட்) 31ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் விநாயகர் சிலை பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டு பூஜைகள் செய்யப்படும். அவ்வாறு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட நாட்களில் நீர்நிலைகளில் கரைக்கப்படும். அப்படி கரைக்கப்படும் போது நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் அசம்பாவிதங்கள் […]
மஹாராஷ்டிராவில் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேதலைமையில் 18 எம்.எல்.ஏக்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். மஹாராஷ்டிராவில் தற்போது ஏகப்பட்ட அரசியல் அதிரடி நகர்வுகள் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடைபெற்று சற்று ஓய்ந்துள்ளது என்றே கூறவேண்டும். சிவ சேனா கட்சி இரண்டாக பிரிந்து இதற்கு முன்னர் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே மற்றும், ஏக்நாத் ஷிண்டே என அணிகளாக மாறியது. இதில் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன், பாஜக எம்.எல்.ஏக்களுடன் கூட்டணி அமைந்து மஹாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினார். மஹாராஷ்டிரா புதிய […]
மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் இடஒதுக்கீடு சம்பந்தமாக எழுந்த பிரச்சனை உச்சநீதிமன்றம் வரை சென்றது. இந்த விவகாரத்தில், தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஓபிசி பிரிவினருக்கு உள்ளாட்சி தேர்தலில் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி தீர்ப்பளித்தது. இதனை மஹராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர […]
நிதி நெருக்கடி காரணமாக தந்தை, தாய் மற்றும் மகன் தற்கொலை முயற்சி உயிர்பிழைத்த-தாய் மற்றும் மகன். மஹாராஷ்டிரா: நேற்று(ஜூலை19) நாக்பூரில் 58 வயது நபர் ஒருவர், தனது மனைவி மற்றும் மகன் மூவரும் காரில் இருந்தபோது தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.இச்சம்பவத்தில் அந்த நபர் உயிரிழந்துவிட்டார். அவரின் மனைவி(55) மற்றும் மகன்(30) பலத்த தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த நபரின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட தற்கொலைக் கடிதத்தில், நிதி நெருக்கடி காரணமாக அவர் […]
மத்தியப் பிரதேசத்தில் அரிய சூறாவளியால் விவசாய நிலங்கள் நாசம். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் ஒரு அரிய சூறாவளி விவசாய நிலத்தை நாசம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல். “இயற்கை எல்லாவற்றையும் ஒரு நொடியில் அழித்துவிடும்” என்று ஒரு சமூக ஊடக பயனர் வீடியோவில் கருத்து தெரிவித்துள்ளார். “இது பயமாக இருக்கிறது” என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். View this post on Instagram A post shared by Hindustan Times (@hindustantimes)
மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருவதால் ராய்காட்,, ரத்னகிரி, கோலாப்பூர் மற்றும் சிந்துதுர்க் போன்ற பகுதிகளுக்கு ஜூலை 9-ஆம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, பால்கர், புனே மற்றும் சதாரா ஆகிய பகுதிகளுக்கு ஜூலை 8 வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மும்பை செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. மேலும் தானே மற்றும் மும்பைக்கு ஜூலை 10 வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுவிடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 86 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸ் தொற்று உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா, கப்பா என்று பல வகைகளில் பரவி வருகிறது. இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் 86 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா […]
மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தில் 30 பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. டெல்டா வகை கொரோனா இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த டெல்டா வகை கொரோனா அதி வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு மக்களை பெரிதளவு பாதித்து வந்தது. தற்போது அங்கு நாளுக்கு கொரோனா தொற்று ஐந்தாயிரம் பேருக்கு உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில் நாசிக்கில் 30 பேருக்கு டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி நாசிக் […]
மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பெல்சர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று சுகாதாரத்துறை தெரிவித்தது. 50 வயதாகும் இந்த பெண்ணிற்கு ஜிகா வைரஸ் தாக்குதலோடு சிக்குன்குன்யா பாதிப்பிற்கும் உள்ளாகி இருக்கிறார். மேலும், இவர் இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளதால் மற்றவர்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாதிப்படைந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் […]
மஹாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகத்தின் அறிக்கையில்,”பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்காக தலா ரூ.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவுகளையும் அரசு ஏற்கும்” என்று சிஎம்ஓ ஒரு ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. CM Uddhav Balasaheb Thackeray has announced ₹5 lakh each for the kin of […]