மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. மகாராஷ்டிராவில் இப்பொழுது முதல்வர் நாற்காலிக்கான போட்டி தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சரை இன்றைக்குள் தீர்மானிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பாக ஆளும் மகாயுதி கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், யார் முதல்வராக பதவியேற்பது என்பது குறித்து இன்று நடைபெறும் கட்சி கூட்டத்தில் […]