மகாராஷ்டிரா: மகாராஷ்ட்ரா முதல்வர் பதவி யாருக்கு என்ற போட்டி ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், பாஜக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு இடையே நடந்து வந்தது. தற்பொழுது அந்த போட்டி முடிவுக்கு வந்தது. இன்று நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதன் தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த தேவேந்திர ஃபட்னாவிஸ், பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், தன்னை சட்டமன்றக் கட்சியின் […]
மும்பை : மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் கடந்தும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், ஏற்கனவே கூறப்பட்டு வந்தது போல பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக இன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸை […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் அதனை வெளியேற்றும் பணிகளிலும், மீட்பு பணிகளிலும் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக விழுப்புரம், கடலூரில் 3 ஒன்றியங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீர் செய்ய ஏற்கனவே மத்திய அரசிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2 ஆயிரம் கோடி ரூபாய் பேரிடர் நிதியாக கேட்டிருந்த […]
தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக மட்டுமே தனித்து 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 13 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. இப்படியான சூழலில், கடந்த முறை போல பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் பொறுப்பை கேட்கலாம் என்ற எண்ணத்தில் சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே இருந்தார் எனக் […]
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. மகாராஷ்டிராவில் இப்பொழுது முதல்வர் நாற்காலிக்கான போட்டி தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சரை இன்றைக்குள் தீர்மானிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பாக ஆளும் மகாயுதி கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், யார் முதல்வராக பதவியேற்பது என்பது குறித்து இன்று நடைபெறும் கட்சி கூட்டத்தில் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. மஹாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்தார் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. மகாராஷ்டிரா மாநில முனிசிபல் கார்பரேஷன் ஊழியர்கள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பு அரசு ஊழியர்களுக்கு இந்த போனஸை அறிவித்துள்ளார். அவர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சுமார் 93,000 பேருக்கும், ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் […]
மீண்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான், அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்ட 202 பேர் பலியாகியுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே மீண்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துவதை […]
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை மூத்த சுகாதார அதிகாரிகள் மற்றும் கோவிட் -19 பணிக்குழுவுடன் நடந்த கூட்டத்தில், மக்கள் தொடர்ந்து கோவிட் தொடர்பான விதிகளை மீறினால் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளுக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை தீவிரமாக பின்பற்றாததால் கோவிட் -19 தொற்று அதிகரித்து வருகின்றன என்று அவர் கூறினார். ஊரடங்கு போன்ற கடுமையான நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்று அவர் எச்சரித்துள்ளார். கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில், 2020 செப்டம்பரில் மாநிலத்தில் […]