சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் இரண்டு இடங்களில் பதிவான தபால் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, கேரளாவின் வயநாடு, பாலக்காடு சட்டசபை தொகுதியிலும், கர்நாடகாவின் சென்னபட்டணா சட்டசபை தொகுதியிலும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.