மத்திய பிரதேசத்தில் சூடாக சப்பாத்தி சுட்டுத்தரவில்லை என மாமியாரை தடியால் அடித்து கொன்ற மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர். மத்தியப்பிரதேச மாநிலம், பிலோ கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். 35 வயதாகும் இவர், தனது மாமியாருடன் வசித்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை, இவர் வேலை முடித்து நள்ளிரவில் வீடு திரும்பினார். அப்பொழுது 55 வயதாகும் அவரின் மாமியார், சுட்டு வைத்த சப்பாத்தியை தட்டில் வைத்துள்ளார். அதனை பார்த்து ஆத்திரமடைந்த சுரேஷ், சப்பாத்தி ஆறியதாகவும், தனக்கு சூடாக சப்பாத்தி சுட்டு […]