எல்லா விரதங்களை போல மகா சிவராத்திரிக்கும் சில விதிமுறைகள் உள்ளது. இந்த விரதம் மற்ற விரதங்களை போல கிடையாது கொஞ்சம் கடுமையான விரதமாக தான் நம்ம இருக்க வேண்டும். மற்ற விரதங்களில் வழிபாட்டில் ஆரம்பித்து விருந்தில் முடியும். ஆனால் சிவராத்திரி அப்படி அல்ல மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான இரண்டு விஷயம் உணவு , நல்ல தூக்கம் இவை இரண்டையும் ஒதுக்கி வைத்து சிவனுக்காக நாம் விரதம் இருப்பது தான் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். உணவையும் , […]
மகா சிவராத்திரி அன்று வீட்டிலேயே எப்படி நம்ம பூஜை செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். ஈசன் உங்கள் பூஜைகளில் இருக்கும் ஆடம்பரங்களை கவனிப்பது இல்லை. நம்முடைய மனத் தூய்மையையும் , அர்ப்பணிப்பையும் தான் விரும்புகிறார். இந்த சிவராத்திரி தினத்தில் கண்களும் , உள்ளமும் ஒரு சேர விழித்திருந்து ஆன்ம பலத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். நம்ம வீட்டில் சிவலிங்கம் அல்லது நடராஜர் சிலை இருந்தால் வீட்டிலேயே இரவு முழுக்க கண்விழித்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம். அன்று முழுவதும் […]
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா நாளை (வியாழக்கிழமை ) 21-ம் தேதி மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. பெருமளவில் கூடும் மக்கள் அனைவருக்கும் அன்றிரவு முழுவதும் மகா அன்னதானம் வழங்கப்படவுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா நாளை (வியாழக்கிழமை ) 21-ம் தேதி மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சமும், சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்படும். சிவனின் அருள் நிறைந்த இரவு என்று வழங்கப்படும் மஹாசிவராத்திரி […]