நார்வே செஸ்: நடைபெற்று வந்த நார்வே செஸ் தொடரில், உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பெற்று அந்த தொடரை கைப்பற்றி உள்ளார். மேலும், அவருடன் விளையாடிய அமெரிக்கா நாட்டின் ஹிக்காரு நகமுரா 2-வது இடத்தையும், தமிழக வீரரான பிரக்ஞானந்தா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். நேற்று நடைபெற்ற இந்த தொடரின் 10-வது மற்றும் இறுதி சுற்றில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடிப்பதற்கு வாய்ப்புகள் இருந்தது. ஆனால், அது சற்று கைநழுவி போனதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் […]
நார்வே செஸ்: நார்வே செஸ் தொடரின், 7-வது சுற்றில் உலக செஸ் சாம்பியனான டிங் லிரினை தோற்கடித்து அசத்தினார் தமிழக இளம் செஸ் க்ராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா. 6-வது சுற்றின் முடிவில் அலிரேசா ஃபிரோஸ்ஜாவிடம் தோல்வி கண்டு 3-வது இடத்தில் நீடித்து வந்தார். அதன்பின் நார்வே செஸ் தொடரில் நடைபெற்ற 7-வது சுற்றில் பிரக்ஞானந்தா, உலக செஸ் சாம்பியனான சீனாவின் டிங் லிரினை முதலில் நடந்த கிளாசிக்கல் சுற்றில் சமன் செய்து, அதன் பிறகு நடந்த சுற்றில் அவரை தோற்கடித்து […]
நார்வே செஸ் : நார்வே நாட்டில் நடைபெற்று வரும் இந்த நார்வே செஸ் தொடரின் 6 சுற்றுகள் தற்போது முடிவடைந்துள்ளது. அதில் முதல் 3 சுற்றுகளில் நன்றாக விளையாடி புள்ளிபாட்டியலில் முதலிடத்தில் இருந்த பிரக்ஞானந்தா அதன் பிறகு 4-வது சுற்றில் தோல்வி அடைந்தார். பின் நடந்து முடிந்த 5-வது சுற்று முடிவில் தமிழக செஸ் க்ராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா அமெரிக்கா செஸ் க்ராண்ட்மாஸ்டரான ஃபேபியானோ கருவானாவை க்ளாசிக்கல் போட்டியில் எதிர்கொண்டு தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் முன்னேறினார். ஆனால், நேற்று நடந்த […]
பிரக்ஞானந்தா : தமிழக வீரரான பிரக்ஞானந்தா கிளாசிக்கல் (Classical) முறையில், மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருக்கிறார். இந்த ஆண்டின் நார்வே செஸ் தொடரானது நார்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன், தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா, நடப்பு உலக செஸ் சாம்பியனான டிங் லிரின் உட்பட 6 பேர் கலந்து கொண்டு இந்த நார்வே செஸ் தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த ஒவ்வொரு சுற்றிலும் ஒரு […]
உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியனை தோற்கடித்து இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் வரலாறு படைத்துள்ளார். இந்தியாவின் 16 வயது கிராண்ட் மாஸ்டர் குகேஷ், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இளம் செஸ் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். எய்ம்செஸ் ரேபிட் போட்டியின், ஒன்பதாவது சுற்றில் கார்ல்சனை தோற்கடித்து குகேஷ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். முன்னதாக, இந்தியாவின் 19 வயது கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, கார்ல்சனை நேற்று நடைபெற்ற 5ஆவது சுற்று போட்டியில் […]
துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கார்ல்சன், 7.5-3.5 என்ற புள்ளி கணக்கில் இயானை வீழ்த்தி 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளார். துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு உலக சாம்பியனும்,உலகத் தரவரிசையில் நம்பர்-1 இடத்திலுள்ளவருமான நார்வே நாட்டை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன் மற்றும் உலகத் தரவரிசையில் 5 வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சி ஆகியோர் மோதினர். இப்போட்டியின்,தொடக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட கார்ல்சன், 7.5-3.5 […]
செஸ் போட்டியின் புதிய பரிணாமமான ஃபிஷ்ஷர் செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு செஸ் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸன் மற்றும் அமெரிக்க வீரர் வெஸ்லி ஸோவுடன் மோதுகின்றனர்.இந்த போட்டியில் வெற்றி பெறுபவர் இந்திய மதிப்பில் ரூ,88,38,125 ($ 125000) ஆகும் .மேலும் இந்த போட்டியில் நடப்பு செஸ் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸன் வெற்றபெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.