தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அண்டார்டிக்கின், தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று இந்த அதிர்ச்சி உணரப்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தெற்கு ஷெட்லேண்ட் தீவுகள் அண்டார்டிக் தீபகற்பத்திற்கு வடக்கே அமைந்துள்ள பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.