அருணாச்சலப் பிரதேசத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ….!

அருணாச்சலப் பிரதேசத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள பசார் எனும் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பசார் பகுதியில் இருந்து 92 கிலோ மீட்டர் தொலைவிலும், 106 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த மாவட்டத்தில் கடந்த 1 ஆம் தேதியும் நில அதிர்வு … Read more

சீனாவில் 7.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 3 பேர் பலி; 23 பேர் காயம்!

சீனாவில் நேற்று மாலை மற்றும் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள டாலி பகுதியில் நேற்று மாலை மற்றும் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.3 ரிக்டர் ஆக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள டாலியில்  நேற்று மாலை … Read more

ஜப்பானின் டோக்கியோவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!

ஜப்பானின் டோக்கியோவில் இன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் டோக்கியோவில் இன்று காலை 08:14 மணிக்கு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் டோக்கியோவின் 407 கி.மீ வடகிழக்கு பகுதியில் ஏற்பட்டது என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான உயிரிழப்பு மற்றும் பொருள் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!

மகாராஷ்டிராவில் இன்று 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று காலை 09:50 மணியளவில் நாசிக் நகருக்கு மேற்கே 103 கி.மீ தூரத்தில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் சொத்து சேதம் ஏதும் கிடைக்கவில்லை.

குஜராத்தில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தற்போது இந்த நில நடுக்கத்தால் எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இரவு 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் அதன் மையப்பகுதியான 7 கி.மீ வடகிழக்குடன் கட்ச் மாவட்டத்தின் துதாயில் இருந்து பதிவாகியுள்ளதாக காந்திநகரத்தை தளமாகக் கொண்ட நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனத்தின்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.