அனைத்து போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. அந்தவகையில், சென்னை எழும்பூரில் உள்ள காவலர்கள் குடியிருப்பில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் […]