இந்திய மக்களின் துன்பங்களை உணர்ந்த அண்ணல் காந்தியடிகள் தன் மேலாடையைத் துறந்த அரை ஆடைப் புரட்சி நாள் இன்று! மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும்! கடந்த செப்டம்பர் 22-ந்தேதி 1921-ம் ஆண்டு, காந்தியடிகள் அரை ஆடைக்கு மாறிய நாள். ஒரு மனிதரை மகாத்மாவாக உயர்த்திய மதுரை சம்பவம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு அரசியல் பிரபலங்கள் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், […]