மின்கட்டண விவகாரத்தில், நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், ஆர்ப்பாட்டம் தேவையா என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தது.இதையடுத்து, மின்சாரா வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் , ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என்றும் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது, பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் […]
கீழடியில் நடந்த முதல் 3 கட்ட அகழாய்வு முடிவுகளை பெற டெல்லி செல்ல உள்ளேன் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என்பது கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது.இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இது குறித்து கூறுகையில், கீழடியில் நடந்த முதல் 3 கட்ட அகழாய்வு முடிவுகளை பெற டெல்லி செல்ல உள்ளேன். விரைவில் முடிவுகள் வெளியிடப்படும். தொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம் தயாராகி […]
கும்பகோணத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழ் ஆர்வலர்கள் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகைப் பொருட்களை காட்சிப்படுத்தும் விதமாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது வருகின்றனர். அதற்கான முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ளும். மேலும் கீழடியில் மார்ச் மாதத்திற்குள் அருங்காட்சியகம் தொடங்க நடவடிக்கை, இதற்காக ரூ3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கீழடியில் மொத்தம் 142 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னைக்குத் தீர்வுகாண புதிய கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், சென்னையில் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண புதிய கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு ஏரிகளை குடிநீர் ஏரிகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கோடநாடு விவகாரத்தில் அனைத்து விசாரணைகளும் நடத்தப்பட்டுவிட்டது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், கோடநாடு விவகாரத்தில் அனைத்து விசாரணைகளும் நடத்தப்பட்டுவிட்டது. விசாரணையில் அரசாங்கம் ஒளிவு மறைவின்றி செயல்பட்டுள்ளது.14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், மீதமுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.