மக்கள் திமுக ஆட்சி மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். கண்டா வர சொல்லுங்க. எடப்பாடியை கையோடு கூட்டி வாருங்கள் என ஏங்கி இருக்கின்றனர். – அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மேடையில் குறிப்பிட்டுள்ளார். இன்று அதிமுக சார்பில் விருதுநகரில் அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார். அதில் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திமுக பற்றி சரமாரி குற்றசாட்டுகளை முன்வைத்தார். அதே போல, […]
தமிழகத்தில் தரையிறங்கும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடப்படும். தமிழக விமான நிலையங்களில் தரையிறங்கும், விமானங்கள் குறித்த அறிவிப்பு தமிழில் வெளியிடப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியான பின்பு தான், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜனிடம், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரவையில் முழு தகுதியுடைய கட்சியாகிய அதிமுக இடம்பெற வேண்டும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள், மத்திய அமைச்சரவையில் சேருவதற்கான முழு தகுதி உடைய கட்சி அதிமுக தான் எனவும், தன்னைப் பொறுத்த வரையில் சென்ற முறையே அதிமுக மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்திருக்க வேண்டும். ஆனால், சில காரணங்களால் அது தடைபட்டு போனாலும் இந்த முறை கண்டிப்பாக இடம்பெற […]
நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தொடர்பான நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நல்ல எண்ணத்தில் தான் நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் எனவும் கூறினார். மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் திமுக தான் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, நாடு முழுவதும் நீட் தேர்வு […]
தமிழகத்தில் அதிமுகவை பொறுத்தளவில் ஹவுஸ்ஃபுலாக உள்ளதாகவும், திமுக தான் காலியாக உள்ளது என தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், 11 எம்.எல்.ஏ. விவகாரத்தில் சபாநாயகர் தனபால் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், இதில் மறைக்க எதுவும் இல்லை என தெரிவித்தார். மேலும், இருதரப்பு விளக்கங்களின் அடிப்படையில் சபாநாயகர் தீர்ப்பு வழங்குவார் என கூறினார். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் அதிமுகவை பொறுத்தளவில் […]
கீழடி அகழாய்வு செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மாஃபா பாண்டியராஜன் அவர்கள் கூறியுள்ளார். கீழடி, கொந்தகை மணலூர் அகரம், ஆதிச்ச நல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் அகழாய்வு பணிகளில் பல கட்டமாக கண்டுபிடிப்புகள் மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த அகழ்வுப் பணிகள் செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு பெற்று அதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த அகழாய்வு பணிகளில் பழங்காலத்தை சேர்ந்த பல பொருள்கள் […]
கீழடியில் உலகத்தரம் மிக்க அருங்காட்சியம் அமைக்க ரூ.12.25 கோடி ருபாய் ஒதுக்கிய நிலையில், இன்று காலை 10 மணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டவுள்ளார். சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் முதுமக்கள் தாழிகள், ஓடுகள், குவளைகள், நாணயங்கள், எலும்புக்கூடுகள், எடைக்கற்கள், சங்கு, கண்ணாடி வளையல்கள், கல்மணிகள், உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பயன்படுத்திய பழந்தமிழர்களின் […]
கீழடியில் உலகத்தரம் மிக்க அருங்காட்சியம் அமைக்க ரூ.12.25 கோடி ருபாய் ஒதுக்கிய நிலையில், நாளை காலை 10 மணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டவுள்ளார். சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் முதுமக்கள் தாழிகள், ஓடுகள், குவளைகள், நாணயங்கள், எலும்புக்கூடுகள், எடைக்கற்கள், சங்கு, […]