தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் அடங்கிய பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமணம் செய்ய கடந்த வாரம் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.அதன்படி,4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 7,500 ரூபாயிலும்,5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.12 ஆயிரம் […]
ஊரின் பெயரை மாற்றுவது, பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவது போன்றவை அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மதுரை உயர்நீதிமன்ற கிளையில், திருச்சி பொன்னம்பட்டி பேருந்து நிலையத்தின் பெயரான காமராஜர் பேருந்து நிலையம் என்ற பெயரை மாற்ற கூடாது என வழக்கு தொடரப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற பேரூராட்சி நிராவகம் முடி செய்துள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வலக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எம்.பிரகாஷ் மற்றும் […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு வழக்கு தொடர்பாக இன்று 64 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர். தூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்கு விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு வழக்கு தொடர்பாக இன்று 64 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர். கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியதால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த போராட்டம் தொடர்பாக […]
பள்ளிக்கல்வித்துறையின் குரூப் ஏ, குரூப் பி அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் லியோ என்பவர், தனக்கு வழங்கப்பட்ட இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் விசாரித்தார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் போதுமான அளவு அதிகாரிகளை கொண்டு, சிறப்பு குழுக்களை அமைத்து தரவுகளை உரிய முறையில் சேகரித்து, ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய […]
கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் ஆகியோருக்கு சாகும் வரை சிறை 3 ஆயுள் தண்டனையும், மற்ற 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தண்டனையை ரத்து செய்ய வழக்கு: இதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் […]
சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் கைதான கடை உரிமையாளர் , அவரது மனைவி முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளை மனுதாக்கல் செய்தனர். இந்த முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, பட்டாசு வெடி விபத்துகளில் தொடர்புடையவர்களுக்கு கருணை காட்ட முடியாது. பட்டாசு விபத்தில் அப்பாவி மக்களின் உயிர் இழப்பு காரணமாக சட்ட விரோத செயல்பாடுகள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது. பின்னர், பட்டாசு ஆலை உரிமையாளர் , அவரது மனைவி முன்ஜாமீன் மனுக்களை […]
கடந்த 2015-ஆம் ஆண்டு சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் ரயில் தண்டவாளத்தில் மீட்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டது. இதில் இருவர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 15 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தது. கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 […]
கடந்த 2015-ஆம் ஆண்டு சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டதில், சந்திரசேகரன், ஜோதிமணி ஆகிய இருவர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 15 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை பிப்.9ல் நிறைவுபெற்ற நிலையில், கோகுல்ராஜ் ஆணவப் […]
தமிழகத்தில் போதுமான அளவு நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ரமேஷ் என்பவர் முறையீடு மதுரை உயர்நீதிமன்ற கிளையில், தமிழகத்தில் போதுமான அளவு நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ரமேஷ் என்பவர் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில், இதனை விசாரித்த நீதிபதிகள், நெல் கொள்முதல் நிலையத்தில் 24 மணி நேரத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். பிரச்சனைகளை தவிர்க்க அதற்கான கட்டமைப்பு வசதியை […]
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 இந்திய மீனவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன்திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்தார். அந்த மனுவில், பாக். கடற்படை தாக்குதலில் குஜராத் மீனவர் உயிரிழந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்ட மத்திய அரசு 68 பேரை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளித்து ஏற்புடையதல்ல. […]
சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த விவகாரத்தில், தற்போது வரை விசாரணை எந்த நிலையில் உள்ளது? விசாரணையை முழுவதும் நடத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? என நீதிபதி கேள்வி. சாத்தான் குளத்தில் போலீஸ் காவலில் வைத்து, தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, இந்த […]
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களில் எவ்வளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எங்கு வைக்கப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி. பள்ளிக்கு அருகே கஞ்சா விற்பனை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்க கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் 50 கிலோவுக்கு அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டால், அந்த வழக்கு போதை தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கும், அதற்கு கீழான வழக்குகள் அந்தந்த […]
6 மாதத்திற்குள் சென்னையிலுள்ள தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு, மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுக்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும். மதுரையை சேர்ந்த மணிமாறன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் பழமையான வரலாற்றுக்கு ஆதாரமாக, பெரும்பாலான தகவல்கள் கல்வெட்டுக்களில் இருந்து கிடைப்பதால், அதன் முக்கியத்துவதை உணர்ந்து, 1961-ல் கல்வெட்டியல் துறையை ஏற்படுத்தபட்டது. பல்வேறு காலகட்டங்களில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில், 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழோடு தொடர்புடையவை. இந்நிலையில்,மைசூர் கல்வெட்டியல் […]
கூண்டுக்கிளியாக உள்ள சிபிஐ அமைப்பை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்க தேவையான சட்டத்தை உருவாக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். ராமநாதபுரத்தில் நடைபெற்ற ரூ.300 கோடி நிதி மோசடி வலக்கை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ விசாரிக்க கோரி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு விசாரித்தது. அப்போது கூண்டுக்கிளியாக உள்ள சிபிஐ அமைப்பை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்க தேவையான சட்டத்தை உருவாக்க […]
7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரின் விடுதலை தொடர்பான முடிவு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிசந்திரன், ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு, 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். இதனையடுத்து, 7 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என சிறையில் இருக்கும் சிலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், அரசியல் தலையீடு காரணமாக தாங்கள் விடுதலை […]
ஆதார் விவரங்களை வழக்கு விசாரணைக்கு புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. புதுக்கோட்டையில் காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்து தரக்கோரி உயர்நீதிமனறத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், சிறுவனின் ஆதார் விபரம் இல்லாத காரணத்தால், சிறுவனை கண்டறிய முடியவில்லை என்று சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், ஆதார் விவரங்களை வழக்கு விசாரணைக்கு புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே? என […]
கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா முதல் தகவல் அறிக்கை நகலின்றி வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. குமரி மாவட்டம் அருமனையில் மத பிரச்சார கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஜார்ஜ் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அரசியல் தலைவர் கடுமையாக விமர்சித்து பேசியதாக பாதிரியார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பாரதியார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் புகாரை அடுத்து வீடியோ ஆதாரத்தின் […]
இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்கள், கடந்த 2019-ம் ஆண்டு தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர்கள் அனைவரும், குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், புதிதாக விண்ணப்பம் செய்யவும், அந்த விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர், மத்திய அரசுக்கு தாமதமின்றி அனுப்பி, உரிய […]
பல்வேறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. இனியும் நீர்நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்கமுடியாது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே, புதுக்குளம் கண்மாயில் மின்மயானம் அமைப்படுவதை எதிர்த்து , உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி பல்வேறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. இனியும் நீர்நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்கமுடியாது என தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக, மதுரை மாவட்ட […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள, ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி 27 ஆண்டுகளாக எனது மகன் ரவிசந்திரன் சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில், 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே […]