மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.500 விதிக்கப்படும் என மதுரை ஆட்சியர் அறிவிப்பு. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும், கொரோனாவின் தாக்கம் குறைந்ததால், பொதுமக்களிடையே முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவது சற்று குறைந்து காணப்பட்டது. இந்த சமயத்தில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பொது இடங்களில் இனி முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க உத்தவிட்டுள்ளதாக மருத்துவத்துறை […]
மதுரையில் அனைத்து அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வாகன மாசை குறைக்கும் வகையில் அரசு அதிகாரிகள் மின்சார வாகனங்களிலோ, சைக்கிளிலோ, நடந்தோ வருமாறு அறிவுறுத்தியுள்ளார். புதன்கிழமைகளில் அரசு அலுவலர்கள் சொந்த வாகனத்தில் வருவதை தவிர்த்துவிட்டு, பொது பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அரசு அலுவலகங்களுக்கு வரும் பார்வையாளர்களையும் பொது போக்குவரத்தை பயன்படுத்த கோருமாறும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 2 பேர் ஒரே டி-சார்ட் அணிந்து ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதாக மதுரை கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 2 பேர் ஒரே டி-சார்ட் அணிந்து ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதாக மதுரை கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில், இந்த போட்டியை முதல்வர் மற்றும் துணை […]
முகக்கவசங்கள் அணியாமல் வெளியே வந்த 1762 பேர் மூலம் 1,83,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில், 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 98 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள 4-ம் கட்ட ஊரடங்கு உத்தரவில், சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களது தேவைகளுக்காக வெளியே வரும் போது, கண்டிப்பாக […]
தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தொழில் வளர்ச்சி நிறுவன இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .மேலும் மதுரை மாவட்ட வருவாய் அதிகாரி, ஆட்சியர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் பாலாஜி மற்றும் ராஜா ராமன் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .பாலாஜி பொதுப்பணித்துறை கூடுதல் செயலராகவும், ராஜாராமன் நகர்ப்புற மற்றும் திட்டமிடல் துறையின் இயக்குநராக […]