நாளை முதல் உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு கோடை விடுமுறை அளித்து பதிவுத்துறை அறிவிப்பு. நாளை முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பதிவுத்துறை அறிவித்துள்ளது. விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வு விவரங்களையும் பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறை மே 1 முதல் தொடங்க உள்ளதால், கோடை விடுமுறை அமர்வு ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறையில் நீதிபதிகள் பாரத […]
பாளையங்கோட்டை சிறையில் நடந்த மோதலில் கைதி கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை சிறையில் நடந்த மோதலில் பலத்த காயமடைந்த முத்து மனோ நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, நாங்குநேரி சேர்ந்த வழக்கறிஞர் பாபநாசம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார். பின்னர் நீதிபதி உத்தரவை அடுத்து தனது முறையீட்டை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் பாபநாசம் மனு தாக்கல் செய்தனர். வழக்கறிஞர் பாபநாசம் மனுவில் கூறுகையில், கொல்லப்பட்ட […]
டாஸ்மாக்கில் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதிகள், பெரும்பாலானோர் கொள்ளையடித்த பணத்தை கொண்டே மது வாங்க வருகிறார்கள். மதுவை கூடுதல் விலைக்கு விற்பது, அவர்களிடமே கொள்ளையடிப்பது போல உள்ளது என கருத்து தெரிவித்தனர். கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் நபர்களிடம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..? […]
25,000 பேர் இருந்தால் தான் அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. ஆக்ஸிஜன் சிலிண்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சையை சேர்ந்த தமிழ் தேசிய கட்சி பொதுச் செயலாளர் தமிழ் நேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ,அங்கீகரிக்கப்படாத லெட்டர் பேடு அரசியல் கட்சிகள் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. குறைந்தபட்சம் […]
விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு ஓன்று தொடரப்பட்டது. தூத்துக்குடியை […]
பாரசீட்டமால் பெற மருத்துவர் பரிந்துரை தேவை இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மதுரையை சேர்ந்த ஜோயல் குமார் என்பர் பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.எனவே தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது தமிழக அரசு சார்பில், பாரசீட்டமால் பெற மருத்துவர் பரிந்துரை தேவை இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.மேலும் இது தொடர்பாக எந்த உத்தரவு […]
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வணிக வளாகங்கள், பெரிய மால்கள், பார்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. அரசு தரப்பில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் வருவதை தடுக்க அதிக மக்கள் கூடும் டாஸ்மாக் கடைகளை வருகின்ற 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது . […]
எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் 17 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. தேனி மாவட்ட ஆவின் தலைவராக நியமிக்கப்பட்ட ராஜா உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் 17 பேர் நியமனம் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமாவாசை என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் 17 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் […]
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை தல்லாக்குளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில், 2011 முதல் 2013 -ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி தனது பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.மேலும் இது தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை ராஜேந்திர […]
வன்கொடுமை வழக்குகளை டி.எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்ற விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்துமாறு தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இரண்டாயிரமாவது ஆண்டு பட்டுக்கோட்டை அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம்பெண்ணைப் பாலியல் பாலத்காரம் செய்த வழக்கில் சுரேந்திரகுமார் என்பவருக்குத் தஞ்சாவூர் நீதிமன்றம் 7ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சுரேந்திரகுமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன், வன்கொடுமை வழக்குகளை டி.எஸ்.பி., அந்தஸ்துக்குக் குறையாத அதிகாரி விசாரிக்க […]