சென்னை : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திங்கள் கிழமை (செப்.30) அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திலிருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் அயோட்டா தமனியில் வீக்கம் இருந்தது. முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் சாய்சதீஷ், வீக்கத்தை அறுவை சிகிச்சையின்றி முற்றிலும் அடைக்கும் வகையில் ஸ்டென்ட் உபகரணத்தை இடையீட்டு சிகிச்சை மூலம் அந்த இடத்தில் பொருத்தினார். இந்த ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை திட்டமிட்டபடி அவருக்கு சரியாக செய்யப்பட்டது. தற்போது, ரஜினிகாந்தின் உடல் நிலை […]