பிரதமர் மோடி இன்றும் நாளையும் தமிழகத்தில் திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் தனிவிமானத்தில் புறப்பட்டு கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வரவுள்ளார் . அதன் பிறகு திருப்பூர் பல்லடத்தில் நடைபெறும் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளார் . அதன் பிறகு மாலை விமானம் மூலம் மதுரை செல்ல உள்ளார். அங்கு சிறு […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக லட்டு கொடுப்பது வழக்கம். திருப்பதி லட்டு உலகம் முழுக்க பிரபலம். தற்போது அதே போலமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று முதல் பிரசாதமாக லட்டு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். முதற்கட்டமாக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் லட்டுகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லட்டு தயாரிக்கும் செலவுகள் கோவில் காணிக்கையில் இருந்து தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்தையொட்டி சன்னதியில் உள்ள கம்பத்தடி மண்டபம் அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு பட்டர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர். சித்திரை திருவிழாவிற்காக காப்பு கட்டிய பட்டர்கள் காலை 10 மணியளவில் 66 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடிப் பட்டத்தை ஏற்றினார். பின்பு கொடிமரத்திற்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட புதுமண்டப கடைகளை பராமரிப்புக்காக திறக்க உயர்நீதிமன்ற கிளை அனுமதி. ஒரு வாரத்திற்குள் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும், வியாபாரம் செய்வதற்கு அனுமதி இல்லை . மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து புதுமண்டபத்தில் 300 க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் முக்கிய கோயில்களில் உள்ள கடைகளை அகற்றும் நடவடிக்கை மீதான இடைக்காலத்தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்துசமய அறநிலையத்துறை மார்ச் 20 ஆம் தேதிக்குள் பதில் […]