தேனி மாவட்ட குரங்கணி காட்டுத்தீயில் படுகாயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தஞ்சையை சேர்ந்த சாய் வசுமதி இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதேபோல், காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்த சென்னையை சேர்ந்த நிவ்ய நிக்ருதி என்பவரும், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இதனால், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைக்கு சென்னை, ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் டிரக்கிங் சென்றபோது குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, திருப்பூரை சேர்ந்த சக்திகலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதில் நேற்று வரை பலி எண்ணிக்கை 14ஆகவே இருந்தது.இந்நிலையில் சக்திகலாவைத்தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.