100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் தனியார் நிலத்திலும் வேலை செய்து வருகிறார்கள். – உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம். கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டம் தான் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம். ஆனால் இந்த திட்டம் சரிவர நடைபெறுவது இல்லை என பல்வேறு குற்றசாட்டுகள் அவ்வப்போது எழும். தற்போது இந்த திட்டம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்துக்களை கண்டனங்களாக பதிவு செய்துள்ளது. […]
கொரோனா காலத்தில் காவல்துறையின் பணி மிகவும் முக்கியமான ஒன்று. காவல்துறையினர் கடமையை செய்யும்போது அவர்களை அச்சுறுத்தினால் நீதிமன்றம் மென்மையாக இருக்காது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது 7-ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]
பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக காவல்துறையினர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து இதுவரை இரண்டு முறை இவரை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவித்திருந்த நிலையில், தற்போது பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் நீடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை […]
அரசுப் பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவி டெண்டருக்கு தடை கோரிய வழக்கில் டெண்டர் தொடர்பாக இறுதி முடிவெடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி லால்குடியைச் சேர்ந்த ஜெ.சுதாகர் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில், அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான 22 ஆயிரம் பேருந்துகளில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான ஜிபிஎஸ் கருவி பொருத்த முடிவு செய்யப்பட்டு மற்றும் இந்த அறிவிப்பை சாலை போக்குவரத்து நிறுவன இயக்குநர் வெளியிட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த டெண்டர் அறிவிப்பில் வெளிப்படையான […]
மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலர் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைப்பது தொடர்பாக 17.4.2018 மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலர் அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டார். மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலர் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று கூறி செயலர் அறிவிப்பாணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரத்த்ரவிட்டுள்ளது.
நடிகர் ஆர்யா தற்போது தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் இறுதியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்வார் என சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை சுற்றி சில சர்ச்சைகள் இருந்து வருகிறது. பெண்களின் மாண்பை சிதைப்பதாகவும், கலாச்சாரத்தை கெடுப்பதாகவும் இருப்பதாக கூறி மதுரையை சேர்ந்த ஜானகியம்மாள் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை உயர்நீதிமன்றத்தில் இது […]