தஞ்சையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார் மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர். அரியலூா் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சோ்ந்த 17 வயது மாணவி, இவா் தஞ்சாவூா் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். விடுதியில் தங்கியிருந்த படித்து வந்த மாணவி ஜனவரி 9-ம் தேதி பூச்சி மருந்து குடித்த நிலையில், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜனவரி 19ம் தேதி உயிரிழந்தாா். மதம் மாறுமாறு கூறி வற்புறுத்தியதால், அவா் மன உளைச்சலுக்கு […]
17 வயது சிறுமியின் 6 மாத கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது. 17 வயது சிறுமியின் 6 மாத கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது. சிறுமியின் சம்மதத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் கருவை கலைக்க நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் வழக்கை விசாரித்து 2 மாதங்களில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தடய அறிவியல் சோதனை மூலம் கர்ப்பத்துக்கு காரணமானவரை உறுதி செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற […]
சென்னை:உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஜனவரி 3 முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து வழக்குகளும் நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும் என்று நீதிமன்ற பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் காணொலி காட்சி மூலமாக விசாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில்,ஜனவரி 3 ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் காணொலி காட்சி மூலமான வழக்குகள் விசாரணை […]
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க கீழமை நீதிமன்றத்துக்கு கூடுதலாக 5 மாதம் அவகாசம். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்து முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு கூடுதலாக 5 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் நகல் கிடைத்த 5 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தடயவியல் சோதனை முடிவுகள் இன்னும் கிடைக்காததால் அவகாசம் தேவை என்றும் செல்போன் உள்ளிட்ட […]
ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் போராட்டம் நடைபெற்றதாக ஸ்டெர்லைட் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை […]
அறநிலையத்துறை ஆணையர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம், குளங்கள் பராமரிப்பை மேற்கொள்ள வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. அறநிலையத்துறை ஆணையர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. கோயில் குளங்களில் குப்பை, கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், மீறுவோர் மீது அபராதம் விதிக்கவும் உத்தரவிட மனு தாக்கல் செய்யப்பட்டது […]
தமிழை பயிற்று மொழியாக்க கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழைப் பயிற்று மொழியாக்க உத்தரவிடக் கோரி பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களை வகுப்புக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவுப்புக்கு தடை விதிக்கக்கோரி அப்துல் என்பவர் மதுரை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அந்த மனுவில், மாணவர்கள் கண்டிப்பாக வகுப்புக்கு வர வேண்டும் என்று சில பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார். இன்னும் 18 […]
பள்ளி மாணவர்கள் வகுப்புகளுக்கு நேரடியாக வர கட்டாயப்படுத்தவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதில். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதில், நாளை முதல் முதல் 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல், அனைத்து கல்லூரிகளும்நாளை முதல் திறக்கப்படவுள்ளது. பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை ஆயத்தமாகி வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. […]
மதுரையில் கொரோனா அதிகரித்ததன் அடிப்படையில் தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற கிளை விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கில் பொதுமக்கள் பயன்படுத்திய மாஸ்க், கையுறைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன..? உயிரி மருத்துவ கழிவுகளை அகற்ற விதிகள் உள்ள போது எப்போதும் நீதிமன்ற உத்தரவை எதிர்பார்ப்பது ஏன்..? என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிட தாமதம் ஏற்படுவது ஏன்..? முடிவுகளை 7 நாள்களுக்கு மேல் வெளியிடவில்லை என்றால் தொற்று இல்லை என […]