சென்னை பல்கலைக்கழக உறுப்புகல்லூரிகளில் இன்று தமிழ் பாட தேர்வு வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 3-வது செமஸ்டர் தமிழ் வினாத்தாள்களுக்கு பதில் கடந்த ஆண்டு நடந்த 4-வது செமஸ்டர் வினைத்தாள் வினோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நடந்த செமஸ்டர் தேர்வு வினாத்தாள் மாற்றி வழங்கியதால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் தமிழ் பட தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகம் இருந்து வந்தது.கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில்,தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.2021 டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை […]
வருகின்ற ஜூன் 2 ஆம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதனையடுத்து,ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும்,சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரலில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளும், 2020 ஏப்ரலில் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளும் நாளை வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கல்லூரிகள், பள்ளிகளில் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பள்ளிகளில் 10 மற்றும் 12 மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு வர அரசு அனுமதி வழங்கியது. கடந்த டிசம்பர் மாதம் இளங்கலை […]
வீட்டிலிருந்தபடியே மாணவர்கள்ஏ4 தாளில் வீட்டில் இருந்து தேர்வு எழுதி அனுப்பி வைக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் அவர்களது செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிக்கைகக்கு எதிராக கல்லுரி மாணவர்கள் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அதன்படி, இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த […]
மாணவர் கிருபா மோகன் நீக்கப்பட்டது தொடர்பாக பதிலளிக்க சென்னை பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருபா மோகன் என்ற மாணவர் சென்னை பல்கலைக்கழக தத்துவவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தவர். பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர் சில நாட்கள் வகுப்புகளுக்குச் சென்று வந்தநிலையில்,அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் என்கிற மாணவர் அமைப்பில் செயல்பட்டார் என்பதற்காக அவரை கல்லூரியிலிருந்து நீக்கியது கல்லூரி நிர்வாகம். அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தில் இயங்கியதாக கூறி தம்மை நீக்கிவிட்டதாக மாணவர் கிருபா மோகன் […]