சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு முக்கிய காரணமே அவர் ஹீரோவாக மட்டும் படங்களில் நடிக்காமல் கதைக்கு தேவைப்பட்டால் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது தான். அப்படி நடித்தாலும் அவருடைய கதாபாத்திரம் படத்தில் இறந்துவிடுவது போல அமைந்துவிடும். குறிப்பாக மெட்ராஸ், வாழை உள்ளிட்ட படங்களில் அவருடைய கதாபாத்திரம் இறந்தது போல காட்டப்பட்டிருக்கும். இதனை வைத்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கூட செய்து கலாய்த்து வந்தனர். […]