தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி அமைந்த பிறகு, நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளினால் (சூதாட்டம்) பணத்தை இழந்து அதிக கடன்களை வாங்கி பலர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் தமிழகத்தின் அரங்கேறியுள்ளன. இதனை தடுக்க தமிழக அரசு புதிய சட்டத்தை இயற்றியது. கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டமானது நிறைவேற்றப்பட்டது. […]
ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளினால் (சூதாட்டம்) பணத்தை இழந்து அதிக கடன்களை வாங்கி பலர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் தமிழகத்தின் அரங்கேறியுள்ளன. இதனை தடுக்க தமிழக அரசு புதிய சட்டத்தை இயற்றியது. கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டமானது நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநில அரசுக்கு ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய உரிமை இல்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. பெரியார் […]
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு இதை அறுவை சிகிச்சை முடிந்து, அமலாக்கத்துறை விசாரணை காவலில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு 9வது முறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலானது நீட்டிக்கப்பட்டு இருந்தது. கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நவம்பர் 6ஆம் (இன்று) தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு […]
கடந்த செப்டம்பர் 2ஆம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில், சனாதன ஒழிப்பு மாநாடு எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சேகர்பாபு, திராவிட கழக தலைவர் கீ.வீரமணி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு மலேரியா போல சனாதானம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். அமைச்சரின் இந்த கருத்து இந்தியா முழுக்க பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் […]
கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி யூ-டியூப் பிரபலம் டிடிஎப் வாசன் , காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக் ஓட்டும் போது முன் சக்கரத்தை தூக்கி விபத்தில் சிக்கினார். இதில் அவரது வலது கை முறிவு ஏற்பட்டது. வாகனம் சேதமடைந்தது. இந்த விபத்து தொடர்பாக பாலுசெட்டிசத்திரம் போலீசார் டிடிஎப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து இருந்தனர். பின்னர் டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சார்பாக, ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு, அதன் பிறகு அவர் ராஜினாமா செய்து, பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வரானார். பல்வேறு அரசியல் நகர்வுக்கு பின்னர் ஒன்றிணைந்த எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் , முறையே தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருந்து வந்தனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 66 இடங்களை கைப்பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அப்போது எதிர்கட்சி தலைவராக எடப்பாடி […]
மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு இந்திய அளவில் பொது நுழைவு தேர்வான நீட் தேர்வு எழுதுவது கட்டாயம். இதனை எதிர்த்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். என்றும், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் சில மாணவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் சோக நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெறுவதாக கூறி அதனை தமிழகத்தில் தடை செய்ய ஆளும் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு, சட்டப்பேரவையில் தீர்மானம் ஆகியவற்றை தொடர்ந்து, தற்போது […]
திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இ.எஸ்.ஐ. தொகையை செலுத்தாதது தொடர்பான வழக்கில், நடிகை ஜெயப்பிரதா நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ.20 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, சிறைதண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். நடிகை ஜெயப்பிரதா அண்ணாசாலையில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம், இ.எஸ்.ஐ. ( ESI ) பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த தொகையை தொழிலாளர் […]
தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையிடமாக இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்க்கு காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு தற்காலிக முறைப்படி அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை நியமித்தது. அவர்களுக்கு தொகுப்பூதியமாக 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் அண்ணா பல்கலைக்கழகம், நிரந்தர ஆசியர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து தற்காலிக ஆசிரியர்கள் சென்னை […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை மறு நாள் வெளியாகவுள்ள நிலையில், அனுமதியின்றி லியோ திரைப்படத்தின் பேனர் வைக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர், திண்டுக்கலில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களுக்கு தடை விதிக்கக்கோரி மனுதாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையில், லியோ திரைப்பட பேனர்களை அனுமதியின்றி எந்த இடத்திலும் வைக்கக்கூடாது […]
லியோ சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி, இன்று மாலை 4 மணிக்கு தமிழக அரசு அதிகாரிகளுடன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. லியோ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், காலை 4 மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கோரிய வழக்கில், இதனை தமிழக அரசே முடிவு செய்யும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அதன்படி, 9 மணி காட்சிக்கு பதிலாக, 7 மணிக்கு தொடங்க தமிழக அரசிடம் மனு அளிக்க சென்னை […]
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, ‘லியோ’ திரைப்படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது. காலை 9 மணி காட்சிக்கு பதில் 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியாக நாளை […]
விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டி, வைஷ்ணவ் தேஜ், உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் உப்பெனா. இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றதால் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. தமிழில் உருவாகும் அந்த படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் விஜய் சேதுபதி வாங்கியதாகவும் தகவல்கள் வெளியானது. இதனையடித்து உப்பெனா படத்தின் கதை திருடப்பட்டு உருவாக்கப்பட்டதாகவும், அது தன்னுடைய கதை என்றும், தேனியைச் […]
பாமக நிறுவனர் ராமதாஸ்,அக்கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் ரத்து. கடந்த 2012,2013-இல் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெரு விழா மாநாடுகளில் காவல்துறை அனுமதி அளித்த நேரத்தை தாண்டி இரவு 10 மணிக்கு பிறகும் தொடர்ந்து கூட்டம் நடத்தியதாகவும்,மாநாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ்,அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.இதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில்,பாமக நிறுவனர் […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில்,23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது.மேலும்,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து,உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும்,தமிழ் மகன் உசேனை அவைத்தலைவராக நியமித்தது செல்லாது என அறிவிக்க கோரியும்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினரும்,ஓபிஎஸ் […]
அதிமுக உட்கட்சி தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற நிலையில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்,இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஆனால்,இதனை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க கோரி கே.சி.பழனிசாமி மகனான சுரேன் பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்,அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டது,கட்சியின் விதிகளுக்கு எதிரானது என்றும், ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளருக்கு கட்சியின் […]
சென்னை,பிராட்வே பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடவேண்டும் என கோரி மறைந்த டிராபிக் ராமசாமி முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் இதனைத் தொடர்ந்து,இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.ஆனால்,ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என கடந்த 2016 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிராபிக் ராமசாமி தொடர்ந்திருந்தார்.இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில்,இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,மாற்று இடம் […]
நாளை முதல் உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு கோடை விடுமுறை அளித்து பதிவுத்துறை அறிவிப்பு. நாளை முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பதிவுத்துறை அறிவித்துள்ளது. விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வு விவரங்களையும் பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறை மே 1 முதல் தொடங்க உள்ளதால், கோடை விடுமுறை அமர்வு ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறையில் நீதிபதிகள் பாரத […]
சென்னை:நடைமுறையை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எல்லாவற்றுக்கும் பொதுநல வழக்கு தொடர்வதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெரும்பாலான டெண்டர்கள் கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் முறைகேடாக வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மனு தள்ளுபடி: இந்நிலையில்,சென்னை,கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் 2014-2018 வரை மேயராக இருந்தவர்களையும் வழக்கில் சேர்க்க […]
விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக பெற்ற 21.29 கோடியை லைகா நிறுவனம் செலுத்தி இருந்தது. கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் படத்தை வெளியிடவும் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை கோரி சென்னை ஐ கோர்ட்டில் வழக்கு. லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக நடிகர் விஷால் 15 கோடி நிரந்தர வைப்பு ஈடாக செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீரமே வாகை சூடவா படம் வெளியாகிவிட்டதால் படத்தை தடை செய்தால் […]