மத்திய பிரதேசத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் முதல்வர் கமல்நாத் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.ஆனால் இதற்கு இடையில் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்தார்.மேலும் மத்திய பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 20-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.இந்நிலையில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் முதல்வர் கமல்நாத் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.ஆனால் இதற்கு இடையில் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்தார். இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதால், டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். முதலமைச்சர் கமல்நாத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜகவில் சிந்தியா இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.