கிருஸ்துமஸ் தினத்தை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் மாதம் 25ஆம் தேதியன்று இரவு 9.15-க்கு மதுரையிலிருந்து சென்னைக்கு இயக்கபடும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சுவிதா கட்டண ரயில் மதுரையிலிருந்து திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.