கொரோனா மறந்தாச்சு, இயல்பு நிலை வந்தாச்சு, திரையரங்கு என்னாச்சு என்ற வசனங்களுடன் கூடிய போஸ்ட்ரை மதுரையில் தளபதி ரசிகர்கள் ஒட்டி திரையரங்குகள் திறப்பது குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் சூர்யாவின் சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து மாஸ்டர் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் […]