பப்ஜி மதனின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பப்ஜி கேம் விளையாடும் போது சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டு வருவதாக யூடியூபர் பப்ஜி மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பப்ஜி மதனை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த புகாரில் தலைமறைவான மதன் கடந்த ஜூலை 18-ஆம் தேதி தருமபுரியில் வைத்து போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ஜாமீன் கோரி மதன் மனுதாக்கல் செய்து […]