பாஜக தமிழக மாணவர்களின் நலனை குழி தோண்டிப் புதைக்கும் வகையில் செயல்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி. சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு பற்றிய ஆயிசுக்குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு தொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், நீட் தேர்வினால் ஏழை எளிய மக்களுக்கான பாதிப்பு என்பது தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. நீட் பயிற்சி மையங்கள் பெரிய அளவிலான கட்டண வசூல். […]