சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சென்னை ரிப்பன் மாளிகையில் கனமழை முன்னெச்செரிக்கை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு மழை பாதிப்பு குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறை பணிகளை தமிழக துணை முதலமைச்சார் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். அதன் பிறகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக […]
சென்னை : இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சுமார் 15 லட்சம் பேர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த உயிரிழப்புகள் பற்றியும், சென்னை மெரினாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். […]
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று சென்னையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், ” வரும் அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளன்று விடுதலை சிறுத்தைகள் மகளிர் அமைப்பு சார்பாக மதுஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது.”என அறிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையில் கள்ளசாராயத்தால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,589ஆக உள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினரை […]
சென்னை : தமிழ்நாட்டில் பருவமழை தொடங்க உள்ளதால், அதற்கு முன்னதாக தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், ” கடந்தாண்டு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டெங்கு பாதிப்பு என்பது பெரியளவில் இல்லை. 80 நாடுகளில் டெங்கு […]
Illicit Liquor: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதி கருணாபுரத்தில் விஷச்சாராயம் விற்கப்பட்டதாக தெரிகிறது. அதனை அருந்தியதால் நேற்று பலர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நேற்று பொறுப்பில் இருந்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் முதலில், நேற்று நிகழ்ந்த உயிரிழப்புகள் விஷச்சாராயத்தால் நிகழவில்லை எனவும், வேறு உடல் உபாதைகள் இருந்ததாகவும் கூறியிருந்த்தார். இதனை அடுத்தும் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கிய பிறகு கள்ளக்குறிச்சி […]
மகப்பேறு சிகிச்சையில் அறுவை சிகிச்சை இல்லாமல் 100 சதவீதம் சுக பிரசவம் என்பதே மகப்பேறு பிரிவின் நோக்கமாகும். – மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குகைதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு அரசு மருத்துவமனைகளின் மகப்பேறு சிகிச்சைகள் பற்றி பல்வேறு தகவல்களை கூறினார். அவர் கூறுகையில், மகப்பேறு மருத்துவ சேவையில் சிறந்த இடத்தில் தமிழகம் இருக்கிறது. சிறந்த மருத்துவ சேவையை அரசு மருத்துவமனை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டை விட […]
வீராங்கனை பிரியா இறப்பதற்கு முன்பு நடந்தவை பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அதில் பேசிய அமைச்சர், வீராங்கனை பிரியா இறந்த போதும் அதற்க்கு முன்னரும் முன்னெடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார். அவர் கூறுகையில், ப்ரியாவின் கால் அகற்றப்பட்டது தெரிந்ததும், நான் அங்கு சென்றுவிட்டேன். எங்கையாவது தவறு நடந்தால் உடனடி நடவடிக்கை […]
தரைக்கு அருகே செல்ல கூடிய மின் வயரால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அது விரைவில் சரிசெய்யப்படும்.- சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம். சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் உள்ள பல்மருத்துவமனை கட்டிட வளாகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு, தீ மேலும் சில இடத்திற்கு பரவாமல் தடுத்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீ […]
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர்கள் வருவதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை அவசர அவசரமாக சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் போட்டு பளபளக்க வைத்தனர். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவதும், அதனை வெளியேற்ற மழைநீர் வடிகால் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருகின்றனர். அதில், சென்னை சைதாப்பேட்டையில் தான் அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் […]
இந்த வருடம் 90 சதவீதம் வெள்ள பாதிப்பு இல்லை. அடுத்த வருடம் 100 சதவீதம் வெள்ள பாதிப்பு இல்லாத சென்னையாக மாறும் . – அமைச்சர் மா.சுப்பிரமணியன். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்ட மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் வடிகால் பணிகள் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் சுமார் 7,100 கோடி ருபாய் செலவில் வெள்ள நீர் தடுப்பு பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்த […]
விதிமுறையை பின்பற்றி வாடகைத்தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றாரா என விளக்கம் கோரப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளதா என்பது தொடர்பாக நாளை சென்னையில் ஆலோசனை மேற்கொள்ளப்படும். மேலும், இணையதளம் மூலம் மக்கள் மருந்துகளின் இருப்புகள் குறித்து அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நயன்தாரா- விக்னேஷ் சிவன் குழந்தை பெற்ற விவகாரம் குறித்து அவர் கூறுகையில், […]
தமிழ்நாட்டில் நேற்று 1604 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன. அதே போல இன்றும் தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட முகாம்கள். இன்று திருநெல்வேலியில் 107 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தற்போது பரவி வரும் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பற்றியும், அதனை தடுக்க தமிழகஅரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், ‘ இன்று திருநெல்வேலியில் மொத்தமாக 107 […]
பணி நேரத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால் பிரசவத்தின் போது, குழந்தை இறந்துள்ளது. இது தொடர்பாக, மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், சூனம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்தின் போது குழந்தை இறந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒரு பெண் தன் பிரசவத்திற்காக வந்துள்ளார். ஆனால் அந்த நேரம், பிரசவம் பார்க்க மருத்துவர் இல்லாத காரணத்தால், செவிலியர் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. […]
திரையரங்குகளை திறக்க பரிந்துரை செய்யுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தளங்களுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தாலும், 110 நாட்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் காணப்படுகிறது. இதனை அடுத்து, திரையரங்குகளை […]
விபத்தில் சிக்கியவரை தன் காரில் மருத்துவமனை அழைத்துச் சென்ற மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு பலரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். பெங்களூர் மற்றும் பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் 23 வயது இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பூந்தமல்லி அருகே நடந்துள்ளது. சாலையில் காயங்களுடன் துடித்த இவரை பார்த்த வாகன ஓட்டிகள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதம் ஆகியுள்ளது. அப்போது அவ்வழியே […]