அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் கொரோனா சிகிச்சை ஒத்திகை பணிகளை சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் வருவதால் இந்தியாவில் கொரோனாவை முன்கூட்டியே தடுக்க மத்திய சுகாதாரதுறை அறிவுறுத்தலின் பெயரில் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இன்று நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் அதே போல கொரோனா சிகிச்சை ஒத்திகை நடைபெறுகிறது. […]
புயலை எதிர்கொள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 3 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று புயலாக வலுப்பெற்று வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு மான்டேஸ் எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை மிகக்கனமழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மிக மிக பலத்த […]
எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அந்த பாதுகாப்பை கொடுப்பது தான் அரசின் கடமை.- தமிழிசை சவுந்தராஜன். கடந்த மாதம் 29ஆம் தேதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொள்ள சென்றார் அப்போது அங்குள்ள லிஃப்ட் சரியாக பராமரிக்காத காரணத்தால் பாதியில் நின்றது. இந்த சம்பவம் அப்போது மிக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று உதவி பொறியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை குறிப்பிடும் வகையில் […]
வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்றுடன் வந்த 3 பேருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு இல்லை என அமைச்சர்.மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஓமைக்ரான் எனும் வகையில் பரவி வருகிறது. இந்த ஓமைக்ரேன் வகை வைரஸ் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதால், தமிழகத்திற்குள் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு […]
தமிழத்தில் கொரோனா தொற்று இல்லாத சூழலை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் […]