சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது பேசி வருகிறார். இது குறித்து பேசிய அவர் ” விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் 2025 தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், உழவர்களின் வாழ்வில் இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்பிகிறேன் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகம்: மேட்டூர் அணையில் திட்டமிட்டபடி தண்ணீர் திறக்கப்படாததால் ரூ.78.67 கோடி மதிப்பில் டெல்டா குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12- ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாகும். ஆனால், தொடர்ச்சியாக கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீரை வழங்க மறுத்து வருகிறது. இதன் விளைவால் டெல்டாவில் குறுவை சாகுபடியும், சம்பா சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் […]