உலக முதலீட்டாளர் மாநாடால் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ரூ 3.43 கோடி முதலீடும் தமிழகத்திற்கு வந்துள்ளது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். அமைச்சர் எம்.சி.சம்பத் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், உலக முதலீட்டாளர் மாநாடால் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ரூ 3.43 கோடி முதலீடும் தமிழகத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் தொழில் துவங்க முன்வருவோருக்கு விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் உரிய அனுமதி வழங்கப்படும். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறித்து மாதந்தோறும் முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது […]
கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.1,02,772 கோடி தனியார் துறை முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். அமைச்சர் எம்.சி.சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழ்நாடு தொழில் துறையின் சாதனைகளை பொறுக்க முடியாமல் அறியாமையில் மு.க.ஸ்டாலின் பேசுவது கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சியுடன் ஒப்பிடும் போது அதிமுக அரசு ஆட்சியில் ஒவ்வொரு வருடத்திலும் மூன்றரை மடங்கு அளவிற்கு அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.1,02,772 கோடி தனியார் துறை முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது […]