காதல் திருமணம் செய்பவர்களை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என உச்ச நீதிமன்றம் அதிரடி . வடமாநிலங்களில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் கிராமத் தலைவர்கள் கொடூரமான தண்டனைகளையும், பல்வேறு நூதன தண்டனைகளை வழங்குவதும் வழக்கமாக உள்ளது. இது தொடர்பான வழக்கை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், கட்டப்பஞ்சாயத்துகளை தடுத்து நிறுத்த கூறியதுடன், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. […]