தடைசெய்யப்பட்ட பப்ஜி கேமை விளையாட, தாயாரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை பயன்படுத்திய சிறுவன். இளைஞர்களை எந்த எல்லைக்கும் செல்ல வைக்கும் ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்தின் மற்றொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பப்ஜி ஆன்லைன் கேமானது தடை செய்யப்பட்டிருந்தாலும், இன்றும் சிலர் சட்டவிரோதமாக விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த விளையாட்டால் பலர் பணத்தை இழந்தாலும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது வீட்டிற்கு தெரியாமல் […]
3 நாட்களில் மட்டும் கௌதம் அதானி 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்துள்ளார். அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 77 பில்லியன் டாலராக உயர்ந்ததையடுத்து, இவர் இந்தியாவிலும், ஆசியாவிலும் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தை பிடித்தார். மேலும் உலகளாவிய பணக்காரர் பட்டியலில் 14-வது இடத்தில் இருந்தார். இந்நிலையில் கவுதம் அதானியின் நிறுவனப் பங்குகளில் அதிக முதலீடு செய்திருக்கும் மூன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கணக்குகளை NSDL எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு […]
ரஜினியின் தர்பார் திரைப்படம் பொங்கல் விடுமுறையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், சிலரிடமிருந்து கலவையான விமர்சனம் வந்தது. தர்பார் தமிழகத்தில் ரூ.90 கோடி வசூல் செய்துள்ளது, ஆனால், இப்படம் வெற்றிக்கு இன்னும் ரூ.30 கோடி தேவையாம். விநியோகஸ்தர்களுக்கு சுமார் 15 கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை தர்பார் கொடுத்துள்ளதாக தெரிகின்றது. தமிழ் சினிமாவில் ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவரது படம் வெளியாகும் போது […]
ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட துரை குணா என்பவர் தேர்தலில் மொத்தம் 1,532 வாக்குகளில் 21 வாக்குகள் மட்டும் பெற்று தேர்தலில் தோல்வியடைந்தார். இந்நிலையில் தோல்வியடைந்த விரக்தியில் தனது தேர்தல் செலவு விவரங்களை போஸ்டரில் அச்சியிட்டு அலுவலக தகவல் பலகையில் அவர் ஓட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட துரை குணா என்பவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 1,532 வாக்குகளில் 21 வாக்குகள் மட்டும் பெற்று தேர்தலில் தோல்வியடைந்தார். […]
மேலூர் அருகில் உள்ள கீழையூரில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக அறிவிப்பு பலகை ஒன்று திருப்பத்தூர் மேலப்பட்டி சாலையில் வைக்கப்பட்டுள்ளது. 868 மனித சக்தி நாட்கள் இதற்காக செலவிடப்பட்டதாகவும், அதற்காக தினசரி ஊதியம் ரூ.205 தரப்பட்டதாகவும் அதில் உள்ளது. மூலப்பொருட்கள் ரூ. 5ஆயிரத்திற்கு வாங்கி மனித சக்திக்காக ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் செலவிடப்பட்டதாகவும் அதில் உள்ளது.ரூ.1.83 லட்சம் செலவில் கிராம ஊராட்சியில் மரக்கன்று நடப்பட்டதாக அறிவிப்பு பலகை மட்டுமே உள்ள நிலையில், […]
தொடர் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று விட்டு நஷ்டத்திலிருந்து வெளியேறுமாறு நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. அதன்படி தொடர் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவை விற்பனை செய்துவிட்டு தொடர் நஷ்டத்திலிருந்து வெளியேற நிதி ஆயாக் பரிந்துரைத்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அரசு தொடர்ந்து நிதி உதவி அளிப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது எனவும் மக்களின் வரிப்பணம் ஏர் இந்தியா போன்ற நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை சீரமைக்க […]