கடலூர் : கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன். இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது. இவர் கடலூர் மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி, அவர்களிடமிருந்து பணம் மற்றும் […]
தனது கடினமான காலங்களில் உதவியதற்காக 150 லாரி ஓட்டுனர்களுக்கு தனது வீட்டில் வைத்து மீரா பாய் சானு விருந்து படைத்துள்ளார். மணிப்பூர் மாநிலம் இம்பால் பகுதியில் உள்ள நோங்போங் கக்சிங் எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த வீட்டின் கடைக்குட்டி தான் மீராபாய் சானு. இவர் தனது சிறு வயது முதலே மிக கடுமையான வறுமையை கடந்து வந்துள்ளார். தனது பள்ளிப்படிப்பை வறுமையிலேயே கடந்து வந்த இவர், பளு தூக்குவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்துள்ளார். எனவே, அது தான் […]
தற்போது பனிக்காலம் என்பதால் காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. சேலம், நாமக்கல் ஆகிய ஊர்களில் இருந்து காஷ்மீர் ஸ்ரீநகர், லாடக் பகுதிக்கு சென்ற லாரி ஓட்டுனர்கள் அங்கு கடும் பனிபொழிவில் சிக்கியுள்ளனர். தற்போது குளிர் காலம் தொடங்கிவிட்டதால், வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலகங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் சேலம், நாமக்கல் பகுதியில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் பனிப்பொழிவில் சிக்கியுள்ளனர். அவர் காஷ்மீர், லடாக் […]