ஆந்திரா: திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, சித்தூர் மாவட்டம் கங்கசாகரம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது சுற்றுலா வேன் மோதி பயங்கர விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை சித்தூரில் நடந்துள்ளது. இந்த விபத்தில், திருச்சியைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். தற்போது, காயமடைந்தர்களில் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் […]
உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி -சென்னை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து எதிரே வந்த லாரியில் மோதியதில் ஓட்டுநர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த கோர சம்பவத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று இரவு விபத்தில் சிக்கிய பேருந்து சென்னையிலிருந்து அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்து பேருந்து எதிர் […]
காலாண்டு வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவற்றை கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (09.11.2023) மாலை 6 மணி வரை லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் ஆதரவு லாரிகள், சரக்கு ஆட்டோக்கள், ஆம்னி பேருந்துகள் என 25 லட்சம் வாகனங்கள் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 […]
கர்நாடகாவில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற டிப்பர் லாரி மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஆனேகல் அருகே அவளஹள்ளி எனும் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க ஒரு டிப்பர் லாரி நின்று கொண்டு இருந்துள்ளது. அப்பொழுது அந்த லாரி கேட்டை கடக்க முயன்ற போது மைசூரில் இருந்து ஓசூர் நோக்கி வந்த தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ரயில் வேகமாக வருவதை கண்ட லாரி ஓட்டுநர் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை அதிகாலை இரண்டு லாரிகளும் எதிரெதிரே மோதியுள்ளது. இதனால் இந்த லாரிகள் தீப்பிடிக்கப்பட்டு எரிய தொடங்கியுள்ளது. உடனே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் இவ்விடத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளனர். இந்த லாரிகளில் 5 பேர் மொத்தமாக இருந்துள்ளனர். இதில் 4 பேர் சம்பவ […]
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரபங்கி அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ-அயோத்யா தேசிய நெடுஞ்சாலை பாரபங்கி அருகே ராம் சனேஹி காட் பகுதியில் பேருந்து ஒன்று பழுதடைந்த நிலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் இந்த பேருந்தின் முன்புறம் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்து உள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் பேருந்தின் […]
டீசல் விலை லிட்டர் ரூ.85 ஆக அதிகரித்துவிட்டதால் லாரி வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வை அடுத்து பார்சல் லாரி வாடகை கட்டணம் இன்று முதல் 25 சதவீதம் உயர்ந்துள்ளது என உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.63 ஆக இருந்தபோது வசூலித்த லாரி வாடகையே தற்போது வசூலிக்கப்படுகிறது. ஆனால், தற்போது லிட்டர் விலை ரூ.85 ஆக உயர்ந்துவிட்டதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை […]
நீண்ட நேரமாக காத்திருந்து லாரியின் முன்பதாக விழுந்து தற்கொலை செய்துகொண்ட நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் பார்ப்போரை பதைபதைக்க செய்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் அடையாளம் தெரியாத ஒருவர் கடந்த 2ஆம் தேதி வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு அவரது தலை முழுவதுமாக சிதைந்த நிலையில் இருந்ததால் பாதிக்கப்பட்டவர் யார் என்பது குறித்து […]
தெலுங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டத்தில் உள்ள டேவரகொண்டா மண்டல் பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் கூலி வேலையை முடித்துவிட்டு, ஆட்டோவில் 20-க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஆட்டோ மீது லாரி மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 7 […]
மேற்கு வங்கத்தில் சரக்கு கப்பலில் ஏற்றி வரப்பட்ட லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியத்தில் அதிலிருந்த இருவர் காணாமல் போயுள்ளனர், அவர்களை தேடும் பனி தீவிரமடைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள மல்டா எனும் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை 8 பேருடன் சரக்கு கப்பல் 9 கல் நிறைந்த லாரிகளை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. லாரிகளை மணிக்க காட்டில் இறக்கும் பொழுது கப்பல் இன்ஜினில் ஏற்பட்ட மாற்றத்தால் கப்பல் சரிந்து லாரிகள் முழுவதும் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதில் எட்டு லாரிகளுடன், லாரியில் […]
ஆரம்பாக்க ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல். திருவள்ளுவர் மாவட்டம், ஆரம்பக்கம் அருகே ஒருங்கிணைந்த சோதனை சாவடி ஒன்று உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் இருந்து, 4 டன் ரேஷன் அரிசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த ரேஷன் அரிசிகள், ஆந்திராவுக்கு கடத்த முயன்ற போது பிடிபட்டுள்ளது. மேலும், இவர்களிடம் இருந்து 2 சரக்கு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் காரில் மோதிய கொள்கலன் லாரி. ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில், வியாழக்கிழமை அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில், திம்மபுரம் கிராமத்திற்கு அருகே ஒரு கொள்கலன் லாரி, எதிரே வந்த காரில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ,பாலை தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பால்வளத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் பால் சப்ளை செய்து வருகிறது.ஆவின் பால் டேங்கர் லாரிகளை இயக்குவதற்கான, ஒப்பந்தம், கடந்த 2018-ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது.ஆனால் அரசு ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை . மேலும் முறைகேடு புகாரில் சிக்கிய நிறுவனம் ஒன்றிற்கு […]
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். இவரது மகள் வனிதாவும், மாதேவனின் சகோதரர் சிவண்ணாவின் மகள் சவுந்தர்யாவும், தனது தாத்தாவுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில், 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி வனிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். இவரது மகள் வனிதா, ஜெ.காருப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் 2–ம் […]
திருப்பூர் மாவட்டம் பனியன் கம்பெனியில் பணிபுரியும் சிவமணி, கனகமணி ஆகிய இரு பெண்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இரு பெண்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இடித்து, லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் ஆதாரம்பாளையம் பகுதியிலுள்ள பனியன் கம்பெனியில் பணிபுரியும் சிவமணி, கனகமணி ஆகிய இரு பெண்கள். இவர்கள் பணியை முடித்துவிட்டு அவினாசி அடுத்த நம்பியம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் இருவரும் கருவலூர் வழியாக […]
கோவையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 2 லாரி ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி, ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில், கன்னியாகுமரியில் இருந்து கோவை நோக்கி சென்ற சரக்கு லாரியும், எதிரே, கோவையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 2 லாரி ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். […]
மேற்குவங்கத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பழைய போயிங் விமானம் ஒன்று விற்கப்பட்டது. விமானத்தை உடைத்து விற்பனை செய்ய ஏற்றிச் சென்று போது மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிய லாரி , நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பழைய போயிங் விமானம் ஒன்றை விற்கப்பட்டு பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி ஒருவர் அந்த விமானத்தை உடைத்து விற்பனை செய்ய விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர், அதை எடுத்து செல்வதற்காக லாரி ஒன்றில் ஏற்றி […]
லாரி – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியாதல் தேனீ மாவட்டத்தில் கோர விபத்து. தலைகவசம் அணிந்துச் சென்றும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் தந்தை. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே இருசக்கர வாகனம் சாலையில் இடறி சரக்கு லாரி டயருக்குள் விழுந்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கோடாங்கிபட்டி அடுத்த மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனது மனைவி மாரியம்மாள் மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சின்னமனூரை நோக்கி இருசக்கர […]
இன்று ஒருநாள் நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளனர். புதிய மோட்டார் வாகனச் சட்டம் நாடு முழுவதும் கடந்த 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது.அபராதங்களும் பன் மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் லாரி ஓட்டுனர்கள் இன்று ஒருநாள் (செப்டம்பர் 19-ஆம் தேதி ) ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளனர். .அபராத தொகையை குறைக்க வலியுறுத்தியும்,லாரி தொழிலை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் நடைபெறுகிறது. இதனால் […]
காங்கிரஸ் சார்பில் செப்.10ல் நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்துக்கு டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக என அறிவித்துள்ளது. மேலும் செப்.10 நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில் இன்று இந்தபோராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் […]