Tag: Loksabha Elections 2024 TN

தேர்தல் பரப்புரை ஸ்டார்ட்ஸ்…. முதல்வர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ் பிரச்சார அட்டவணை…

Election2024 : நாடுமுழுவதும் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான அட்டவணையானது வெளியாகி உள்ளது. அதில், வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட வாக்குபதிவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. Read More – தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ… நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அடுத்து இறுதிக்கட்ட வேட்பாளர் […]

#ADMK 6 Min Read
Tamilnadu CM MK Stalin - Edappadi Palanisamy

அதிமுக (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டி! தேர்தல் ஆணையத்திடம் மனு

OPS: அதிமுக (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அதிமுக-வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். Read More – மக்களவை தேர்தல்: அதிரடி திருப்பம்..! பாஜக – பாமக கூட்டணி உறுதி இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, […]

#ADMK 3 Min Read

மக்களவை தேர்தல்: அதிரடி திருப்பம்..! பாஜக – பாமக கூட்டணி உறுதி

PMK – BJP: மக்களவை தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடக்கிறது. இதையடுத்து திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளையும் ஒதுக்கி கொடுத்துள்ளது. Read More – தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை! தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி ஆனால் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணியை இன்னும் இறுதி […]

#BJP 5 Min Read

வாகனப் பேரணி..! கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு

PM Modi: பாஜக சார்பில் நடைபெறும் வாகனப் பேரணியில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். கர்நாடக மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த பிரதமருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பிரதமர் மோடி சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை சுமார் 2.5 கி.மீ. தொலைவிற்கு வாகன பேரணி செல்கிறார். Read More – தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ… […]

#BJP 3 Min Read

தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ…

DMK : மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதியுடன் ஆட்சி பொறுப்பு நிறைவடைய உள்ள நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுக்கும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் 543 தொகுதிகளின் ரிசல்ட் வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் தமிழகம் (39) […]

#CPI 14 Min Read
Tamilnadu CM MK Stalin

இதுதான் நாங்க போட்டியிடும் ‘சாதகமான’ தொகுதி.! காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு.!

Congress-DMK : வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் தொகுதிகள் தற்போது இறுதி செய்யப்ட்டுள்ளன . ஏற்கனவே, திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக , இந்திய முஸ்லீம் லீக் கட்சிகள் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளனர் என்ற விவரங்கள் வெளியாகிவிட்டது. Read More – அண்ணாச்சி கூட்டணி என்னாச்சி.? பாமகவை விட்டு பிடித்த அதிமுக.! தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் புதுச்சேரி […]

#DMK 5 Min Read
Congress

அண்ணாச்சி கூட்டணி என்னாச்சி.? பாமகவை விட்டு பிடித்த அதிமுக.!

ADMK-PMK :  வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என தேதி அறிவிக்கபட்ட பின்னரும் கொங்கு மண்டலத்தில் பிரதான கட்சியாக இருக்கும் பாமக இன்னும் தங்கள் தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டை இறுதி செய்யாமல் இருந்து வருகிறது. திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி உடன்பாடை இறுதி செய்துவிட்டது. இன்னும் சில தினங்களில் திமுகவுக்கு என்னென்ன தொகுதிகள், கூட்டணி கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள் , யார் வேட்பாளர்கள் என்ற விவரங்கள் வெளியாகிவிடும். Read More […]

#ADMK 6 Min Read
PMK Leader Anbumani Ramdoss - ADMK Chief President Edappadi Palanisamy

பாஜக தலைமையில் ‘மெகா’ கூட்டணி.! அமமுக, ஓபிஎஸ் அணிக்கு ஒற்றை இலக்க தொகுதிகள்.?

AMMK-OPS : மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் கூட்டணி விவகாரங்களை விரைந்து முடிக்க ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் திமுக தனது கூட்டணி பேச்சுவார்த்தையை முழுதாக நிறைவு செய்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் களம் இறங்கியுள்ளது. தமிழகத்தின் அடுத்து அனைவரும் எதிர்பார்ப்பது, அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தனித்தனி கூட்டணிகள். இதில் பிரதான கட்சிகள் எந்தெந்த கூட்டணிக்கு செல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பல்வேறு அரசியல் திருப்பங்கள் […]

#AMMK 6 Min Read
TTV Dhinakaran - O Panneerselvam

பாஜகவில் சரத்குமார்… நள்ளிரவில் நடந்தது என்ன.? அண்ணாமலை விளக்கம்.!

BJP – Sarathkumar : நடிகர் சரத்குமார் கடந்த 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சி எனும் அரசியல் கட்சியை துவங்கினார்.  அதன் பிறகு 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி, 2021இல் மக்கள் நீதி மய்யம் உடன் கூட்டணி என செயல்பட்ட சரத்குமார் தற்போது பாஜக கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுக்க உள்ளார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தனது கட்சியை அப்படியே பாஜவுடன் இணைத்துவிட்டார். Read More – சமத்துவ மக்கள் கட்சியை […]

#Annamalai 6 Min Read
Sarathkumar - Annamalai BJP President

சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் தலைவர் சரத்குமார்.!

BJP-SMK : நடிகர் சரத்குமார் தலைவராக பொறுப்பில் இருந்த கட்சி சமத்துவ மக்கள் கட்சி. இந்த கட்சி , வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டுடன் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. சரத்குமாரின் சமக, பாஜகவுடன் கூட்டணி வைத்து குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று முக்கிய முடிவை சரத்குமார் அறிவித்துள்ளார். Read More – தமிழக போலீஸ் கும்பகர்ணன் போல தூங்குகிறார்கள்… இபிஎஸ் கடும் குற்றசாட்டு.! இன்று சென்னை தி […]

#BJP 5 Min Read
Sarathkumar

திமுக கூட்டணி : நாகை, திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டி.!

DMK-CPI : வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட , தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்ற கழக கட்சியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மதிமுக, கொமக, முஸ்லீம் லீக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. Read More – திமுக கூட்டணி – மதுரை, திண்டுக்கல்லில் சிபிஎம் போட்டி அதன்படி, திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் […]

#CPI 4 Min Read
DMK-CPI Elections2024

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2, காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஏன்.? திருமா விளக்கம்…

DMK-VCK :வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக உள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. கடந்த 2019 தேர்தலில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் ஒன்றில் தனி சின்னத்திலும் இன்னொரு தொகுதியில் திமுக சின்னத்திலும் நின்று வெற்றிபெற்றனர். Read More – மக்களவை தேர்தல்..! சிவகங்கை தொகுதியில் ஓ.பி.எஸ் போட்டியிட விருப்ப மனு அதனால், இன்று திமுக, விசிகவுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசிக தலைவர் 3 தனித்தொகுதி, […]

#DMK 7 Min Read
DMK-VCK - Thirumavalavan

திமுகவுக்கு ஆதரவு.. மக்களவையில் நான் போட்டியிடவில்லை.! – கமல்ஹாசன் அறிவிப்பு.!

DMK-MNM : மக்களவை தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவர்த்தையில் பிரதான கட்சிகள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் , விசிக, மதிமுக, முஸ்லீம் லீக் கட்சிகளை தொடர்ந்து இன்று மக்கள் நீதி மய்ய கட்சியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. Read More – திமுக கூட்டணியில் தொடரும் இழுபறி… காங்கிரஸ் தேசிய தலைவர்கள் சென்னை வருகை.! மநீம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று […]

#DMK 3 Min Read
MNM Party Leader Kamalhaasan

திமுக கூட்டணியில் தொடரும் இழுபறி… காங்கிரஸ் தேசிய தலைவர்கள் சென்னை வருகை.!

DMK – Congress – மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையின் கீழ் தனித்தனி கூட்டணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் தற்போது வரையில் திமுக கூட்டணி மட்டுமே உறுதியாக தங்கள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு விவரங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. Read More – எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் 5 உத்திரவாதங்கள் இதுதான்.! ப.சிதம்பரம் விளக்கம்.!  முன்னதாக திமுக தலைமையிலான கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு […]

CM Stalin 5 Min Read
MK Stalin - Congress

திமுகவிடம் நாங்க 4 கேட்டோம்.. 2 சீட் கொடுத்துருக்காங்க.! திருமாவளவன் பேட்டி.!

DMK – VCK : மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கூட்டணி கட்சிகள் தங்கள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. காலையில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பும் வழங்க இறுதி முடிவு செய்யப்பட்டது. Read More – திமுக – மதிமுக தொகுதி பங்கீடு.! வேட்பாளர் யார்.? எந்த தொகுதியில் போட்டி.? இதனை தொடர்ந்து விசிக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை இறுதி முடிவு […]

DMK-VCK 5 Min Read
Thirumaavalavan VCK Leader

திமுக – மதிமுக தொகுதி பங்கீடு.! வேட்பாளர் யார்.? எந்த தொகுதியில் போட்டி.?

DMK – MDMK : மக்களவை தேர்தல் நெருங்குவதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடை இறுதி செய்த நிலையில், விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகின்றன. Read More – திமுக – விசிக – மதிமுக.! இன்று இறுதி முடிவு எட்டப்படுமா.? முதல்வருடன் சந்திப்பு.! இன்று காலை திமுக – […]

#DMK 4 Min Read
MK Stalin - Vaiko

திமுக – விசிக – மதிமுக.! இன்று இறுதி முடிவு எட்டப்படுமா.? முதல்வருடன் சந்திப்பு.!

DMK-VCK : மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ள நிலையில், திமுகவின் பிரதான கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் இன்னும் இறுதி முடிவை எடுக்காமல் இருந்து வருகின்றன. Read More – புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்.! அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி.! இதில் விசிக சார்பில் 2 தனி தொகுதிகளும், ஓர் பொது […]

#DMK 5 Min Read
MK Stalin - Thirumavalavan

இப்படித்தான் தேர்தலை நடத்த வேண்டும்.. தேர்தல் ஆணையரிடம் விசிக கோரிக்கை.!

Thirumavalavan – இன்னும் ஒரு மாத காலத்தில் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் தொடங்க உள்ளது. அதற்கான வேளைகளில்அரசியல் கட்சிகள் தயாராவதை விட வேகமாக, தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. அடுத்தடுத்த ஆலோசனை கூட்டங்கள், கட்சியினரிடையே கோரிக்கைகள் என சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது அனைத்து மாநில தேர்தல் ஆணையமும். Read More – LKG குழந்தைக்கு பாலியல் தொல்லை… பள்ளி ஆசிரியர்கள் கைது.! அதே போல பிரதான கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தங்கள் கோரிக்கைகளை […]

#Thirumavalavan 4 Min Read
VCK Leader Thirumavalavan

கன்னியாகுமரியில் திமுக தேர்தல் அறிக்கை குழு பொதுமக்களிடம் கருத்து கேட்பு..!

2024 கான பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தால் திமுகவினர் தங்களது தேர்தல் அறிக்கையை  தயாரிக்க, திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழு முதற்கட்டமாக  நேற்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி சென்றனர். அக்கூட்டத்தில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தரப்பினரிடம் இருந்து மனுக்களை பெற்றனர். தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை மோடி பார்வையிடாதது ஏன்? – ஆ.ராசா […]

#DMK 5 Min Read

நாடாளுமன்ற தேர்தல் – நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். பாளைங்கோட்டையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருக்கக்கூடிய 10 சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வெளியிடப்பட்டுள்ளது. […]

#Nellai 4 Min Read