வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திய எதிர்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு செய்யப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடைபெற்ற இரு அவைகளில் மக்களவை மற்றும் மாநிலங்கவையில் தாக்கல் செய்தார். பின்னர் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று 2021-22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர். இந்நிலையில், இன்று தொடங்கிய மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க […]
பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த பின்னர் மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பின்னர் 2020 -21 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இன்று முதல் பிப்ரவரி 30-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் ஆம் தேதி வரை 2வது அமர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், பொருளாதார […]
மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசினார்.அப்போழுது அவர் பேசுகையில்,வாஜ்பாய் போன்ற ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை. வாஜ்பாய் எனக்கு தந்தையை போன்றவர். பட்ஜெட்டில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து எந்தவிதமான குறிப்பும் இடம்பெறவில்லை, அரசு அந்த திட்டத்தை மறந்துவிட்டதா அல்லது வாஜ்பாயையே மறந்துவிட்டதா? என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். மேலும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தீவிரம் காட்டினார் வாஜ்பாய்.பெட்ரோல் – டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் பேசினார்.