உறுப்பினர்களின் முழக்கங்கள் அவைக்குறிப்பில் இடம் பெறாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 17-வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.ஆனால் புதிய எம்பிக்கள் பதவி ஏற்றபோது, முழக்கங்களை எழுப்பினர். இது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், உறுப்பினர்களின் முழக்கங்கள் அவைக்குறிப்பில் இடம் பெறாது .மேலும், மத ரீதியான கருத்துகளை சொல்ல மக்களவையில் அனுமதி இல்லை .அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்புடன், மக்களவை மரபுகளை காப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை முடக்கும் எம்.பிக்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யக்கோரும் மகாராஷ்டிரா மாநில பாஜக எம்.பி மனோஜ் திவாரியின் கருத்துக்கு, சந்திர சேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கவிதா வரவேற்பு தெரிவித்துள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இறு அவைகளிலும் தொடர்ந்து 13வது நாளாக இன்றும் முடங்கியுள்ளன. இதனால் எதிர்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம், அரசு கொண்டுவரும் மசோதாக்கள் உட்பட பல மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன. நாடாளுமன்றத்தை முடக்கும் […]