நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக நீடிக்க உள்ளார். புதிய அமைச்சர்களின் பதவியேற்பு வருகிற மே 30ஆம் தேதி நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து நாடாளுமன்றம் கூட்டத்தொடர் துவங்க உள்ளது.அதன் படி, வருகிற ஜூன் மாதம் ஆறாம் தேதி 17 ஆவது நாடாளுமன்றம் முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பங்கேற்பார்கள் […]
மக்களவை தேர்தல் முடிவடைந்து தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை நோக்கி செல்கிறது. பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றியை ருசிக்க காத்திருக்கிறது. அதே போல தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சேர்த்து 39 மக்களவை தொகுதியில் 37 இல் முன்னிலை வகித்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி அறிவிப்புகள் தொடர்ந்து அறிவித்து வந்தவண்ணம் உள்ளன. இதனால் பலரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராளுமன்ற தேர்தலில் […]
மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங் களாக தேர்தல் நடைபெற்றது.மேலும் தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக் கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் 7300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் . பெரம்பலூர் […]
இந்தியாவில் மக்களவைதேர்தல்7-கட்டமாகநடைபெற்று முடிந்துள்ளது.நாளைமறுநாள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.தேர்தல் முடிவிற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்து தமிழகம் உட்பட 10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளோடு, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை ஆலோசனை மேற்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (மே 12 ம் தேதி) 6 -ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.நாளை (மே 12 ம் தேதி) மொத்தம் 59 தொகுதிகளுக்கு 6 -ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. உத்தரபிரதேசம் 14 தொகுதிகள்,அரியானா 10 தொகுதிகள், மேற்குவங்கம், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகளுக்கு தேர்தல் […]