சுமார் 3 கி.மீ நீளமுள்ள வெட்டுக்கிளிகள் கூட்டம் ஹரியானா மாநிலத்தின் குருகிராமைத் தாக்கியுள்ளது. இது இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் டெல்லிக்குள் நுழைய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. டெல்லிக்குள் நுழைய வாய்ப்புள்ளது எனவும் இவற்றை கட்டுப்படுத்த கிராமப்புறங்களில் வாகனம் பொருத்தப்பட்ட பம்ப் செட் மூலம் ரசாயனங்கள் தெளிக்கிறோம் என்று Amit Khatri கூறினார். இதனையறிந்த குருகிராம் நிர்வாகம் தாக்குதல் குறித்து அதன் குடியிருப்பாளர்களை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் ஜன்னல்களை மூடி […]
கொரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை தடுக்க வேண்டும். கொரோனா பரவலில் தமிழக அரசு காட்டிவரும் அலட்சியத்தை வெட்டுக்கிளி விவகாரத்திலும் தொடராமல் உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வடமேற்கு மாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, விவசாயிகளையும் பொதுமக்களையும் பெரும் அச்சுறுத்தலுக்கும் அவதிக்கும் ஆளாக்கி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி கிராமத்திலும், நீலகிரி மாவட்ட […]
வெட்டுக்கிளிகள் படை தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு – தமிழக வேளாண்துறை அறிவிப்பு. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் எல்லாரும் அதிர்ந்து போயிருக்கும் நிலையில், அடுத்தடுத்து வரும் எல்லாமே சோதனைக் காலமாக இருக்கிறது. வடமாநிலத்தில் விவசாய நிலங்களை திடீரென வெட்டுக்கிளிகள் ஆக்ரமித்துள்ளது. வெட்டுக்கிளிகள் வயல்களுக்குள் புகுந்து பயிற்களை சேதம் செய்து விடும் தன்மையுள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவு வரை பறக்கும் தன்மை கொண்டவை. இதனால் வடமாநில விவசாயிகள் பெரும் கவலை கொண்டுள்ளனர். இதனிடையே, […]